கடலூரில், சாராய ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி - கலெக்டர் அன்புசெல்வன் தொடங்கி வைத்தார்


கடலூரில், சாராய ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி - கலெக்டர் அன்புசெல்வன் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 6 Feb 2020 4:00 AM IST (Updated: 6 Feb 2020 9:57 AM IST)
t-max-icont-min-icon

கடலூரில் சாராய ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் அன்புசெல்வன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

கடலூர், 

மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை சார்பில் சாராய ஒழிப்பு மற்றும் மது அருந்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு பேரணி கடலூரில் நேற்று நடைபெற்றது. இதை கடலூர் மாவட்ட கலெக்டர் அன்புசெல்வன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

பேரணியில் கலந்துகொண்ட மாணவ-மாணவிகள் மது அருந்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியபடி கோ‌‌ஷம் எழுப்பி சென்றதோடு, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களையும் வினியோகம் செய்தனர். மேலும் கடலூர் வேலாயுதனார் கலைப்பேரவை தலைவர் சம்பந்தமூர்த்தி எமதர்மன் வேடம் அணிந்து மது அருந்துவதனால் ஏற்படும் தீங்குகள் குறித்து நடித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

கடலூர் ஜவான் பவான் பில்டிங் அருகில் இருந்து புறப்பட்ட இந்த பேரணி அண்ணாபாலம், பாரதி சாலை வழியாக கடலூர் டவுன்ஹாலை சென்றடைந்தது.

இதில் கலால் உதவி ஆணையர் விஜயராகவன், மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீதரன், கடலூர் கல்வி மாவட்ட அதிகாரி சுந்தரமூர்த்தி, போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் தீபா, பிருந்தா, நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள் சந்தானராஜ், அன்னம் மற்றும் கடலூர் புனித வளனார் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட மாணவ-மாணவிகள், மஞ்சக்குப்பம் வேணுகோபாலபுரம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் கலந்து கொண்டனர்.

Next Story