மாவட்ட செய்திகள்

தைப்பூச விழாவிற்காக முருகன் கோவில்களில் தேர் தயார்படுத்தும் பணி மும்முரம் + "||" + Preparing chariots in Murukan temples for the Thaipoosam festival

தைப்பூச விழாவிற்காக முருகன் கோவில்களில் தேர் தயார்படுத்தும் பணி மும்முரம்

தைப்பூச விழாவிற்காக முருகன் கோவில்களில் தேர் தயார்படுத்தும் பணி மும்முரம்
தைப்பூச விழாவையொட்டி கரூர் முருகன் கோவில்களில் தேர் தயார்படுத்தும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
வேலாயுதம்பாளையம், 

கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் புகழிமலையில் பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் தைப்பூச திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். அதன்படி இந்த ஆண்டுக்கான விழா கடந்த 2-ந்் தேதி சாந்திபூஜை மற்றும் கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதையொட்டி முருகன் தினமும் பல்வேறு அலங் காரத்தில் ரத வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை மறுநாள் (சனிக்கிழமை) நடக்கிறது. இதற்காக தேரை தயார்படுத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. டி.என்.பி.எல் தீயணைப்பு வாகனம் மூலம் தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டு தேர் சுத்தம் செய்யப்பட்டது.

இதே போல், கரூர் வெண்ணெய்மலையில் உள்ள பாலசுப்ரமணியசாமி கோவிலில், தைப்பூசத்தையொட்டி முருகபெருமான் தினமும் இரவு பல்லக்கில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சி தருகிறார்.

இன்று (வியாழக்கிழமை) காலை 9 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. 8-ந் தேதி தைப்பூச தேரோட்டம் நடக்கிறது. மாலை 4.30 மணிக்கு ்தேர் வடம் பிடித்து இழுக்கப்படுகின்றது. ேதர்திருவிழாவையொட்டி தேரினை அழகுபடுத்தும் பணிகள் நடந்து வருகிறது. கோவில் கிரிவலப்பாதை யானது ேதரோட்டத்துக்காக சீரமைக்கப்பட்டு வருகிறது.