21 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் நாளை முதல் செயல்படும் - கலெக்டர் ரத்னா தகவல்


21 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் நாளை முதல் செயல்படும் - கலெக்டர் ரத்னா தகவல்
x
தினத்தந்தி 6 Feb 2020 1:20 PM IST (Updated: 6 Feb 2020 1:20 PM IST)
t-max-icont-min-icon

21 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் நாளை முதல் செயல்படும் என்று கலெக்டர் ரத்னா கூறினார் அரியலூர் மாவட்ட கலெக்டர் ரத்னா வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

அரியலூர், 

அரியலூர் மாவட்டத்தில், கே.எம்.எஸ். திட்டத்தின் கீழ் 2019-20-ம் ஆண்டில் சம்பா பருவத்தில் நடைபெறும் அறுவடையை முன்னிட்டு விவசாயிகள் பயன்பெறும் வகையில் 21 கிராமங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. 

அதன்படி அரியலூர் தாலுகாவிற்குட்பட்ட கீழக்காவட்டாங்குறிச்சி, கரைவெட்டி, விளாகம், பளிங்காநத்தம், இலந்தைக்கூடம், குருவாடி, காமரசவள்ளி, ஓரியூர், ஏலாக் குறிச்சி, கள்ளுர், கீழக்கொளத்தூர், திருவெங்கனூர், நானாங்கூர், திருமானூர், வடுகபாளையம், அழகியமணவாளன், கீழவரப்பன்குறிச்சி ஆகிய கிராமங்களிலும், உடையார்பாளையம் தாலுகாவிற்கு உட்பட்ட அண்ணகாரன்பேட்டை, இடங்கன்னி, பிள்ளைப்பாளையம் ஆகிய கிராமங்களிலும், செந்துறை தாலுகாவில் தா.கூடலூர் கிராமத்திலும் என மொத்தம் 21 கிராமங்களில் நேரடி கொள்முதல் நிலையங்கள் நாளை (வெள்ளிக்கிழமை) முதல் பயன்பாட்டிற்கு வர உள்ளது. எனவே அருகில் உள்ள விவசாய பெருமக்கள் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை பயன்படுத்தி பயன்பெறலாம்.

இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

Next Story