மாவட்ட செய்திகள்

பொது வினியோக திட்ட குறைகளை தீர்க்க சிறப்பு முகாம்; நாளை நடக்கிறது + "||" + Special Camp to resolve public distribution grievances; It is happening tomorrow

பொது வினியோக திட்ட குறைகளை தீர்க்க சிறப்பு முகாம்; நாளை நடக்கிறது

பொது வினியோக திட்ட குறைகளை தீர்க்க சிறப்பு முகாம்; நாளை நடக்கிறது
குமரி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:–
நாகர்கோவில், 

குமரி மாவட்டத்தில் பொது வினியோகத்திட்ட செயல்பாட்டில் காணப்படும் குறைகளை களைவதற்கும், மக்களின் குறைகளை கேட்டு உடனுக்குடன் நிவர்த்தி செய்வதற்கும் சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நாளை (சனிக்கிழமை) நடக்கிறது. முகாமானது அகஸ்தீஸ்வரம் தாலுகாவில் தேரேகால், தோவாளை தாலுகாவில் திடல், கல்குளம் தாலுகாவில் நுள்ளிவிளை, திருவட்டார் தாலுகாவில் அருவிக்கரை ஆகிய ஊராட்சிகளுக்கு அந்தந்த ஊராட்சி அலுவலகங்களில் நடைபெறுகிறது.

இதேபோல் விளவங்கோடு தாலுகாவில் களியக்காவிளைக்கு அங்குள்ள பேரூராட்சி அலுவலகத்திலும், கிள்ளியூர் தாலுகாவில் ஏழுதேசத்துக்கு அங்கிருக்கும் பேரூராட்சி அலுவலகத்திலும் வட்ட வழங்கல் அலுவலர் தலைமையில் முகாம் நடைபெறும்.

எனவே சம்பந்தப்பட்ட ஊராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிக்கு உட்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் ஸ்மார்ட் ரே‌ஷன் கார்டு பெறாமல் இருந்தால் முகாமில் கலந்துகொண்டு உரிய ஆவணங்களுடன் மனு அளிக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா வைரஸ் தொடர்பான வதந்திகளை நம்ப வேண்டாம்; கலெக்டர் பிரசாந்த் வடநேரே பேட்டி
குமரி மாவட்ட மக்கள் கொரோனா வைரஸ் தொடர்பான வதந்திகளை நம்ப வேண்டாம் என்று கலெக்டர் பிரசாந்த் வடநேரே கூறினார்.
2. மீனவர் குறைதீர்க்கும் கூட்டம்
குமரி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–
3. அம்மா திட்ட சிறப்பு முகாம் இன்று நடக்கிறது
குமரி மாவட்டத்தில் உள்ள 6 தாலுகாக்களிலும் அம்மா திட்டத்தின் 5–ம் கட்ட சிறப்பு முகாம் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு நடக்கிறது.
4. முதல்–அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள்; கலெக்டர் பிரசாந்த் வடநேரே தொடங்கி வைத்தார்
நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற முதல்–அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளை கலெக்டர் பிரசாந்த் வடநேரே தொடங்கி வைத்தார்.
5. இரட்டை ரெயில் பாதை பணி: ஆரல்வாய்மொழி – குமாரபுரம் சாலையில் போக்குவரத்து மாற்றம்
குமரி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–