கோழிக்கழிச்சல் நோய் தடுப்பு முகாம் 9–ந் தேதி தொடங்குகிறது


கோழிக்கழிச்சல் நோய் தடுப்பு முகாம் 9–ந் தேதி தொடங்குகிறது
x
தினத்தந்தி 7 Feb 2020 3:00 AM IST (Updated: 6 Feb 2020 7:51 PM IST)
t-max-icont-min-icon

குமரி மாவட்டத்தில் கோழிக்கழிச்சல் நோய் தடுப்பு முகாம் 9–ந் தேதி தொடங்குகிறது.

நாகர்கோவில், 

குமரி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–

கோழிக்கழிச்சல் நோயானது பெரும்பாலும் கோழிகளில் இறப்பை ஏற்படுத்தும் கொடிய நோய். இந்நோய் ஒரு கோழியை தாக்கும்போது அது வேகமாக மற்ற கோழிகளுக்கும் பரவி மிகுந்த பொருளாதார இழப்பை ஏற்படுத்தும்.

இந்நோயை தடுப்பதற்காக குமரி மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத்துறை மூலம் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் கோழிக்கழிச்சல் நோய் தடுப்பூசி முகாம் நடத்தப்படும். 2 வார காலம் நடைபெறும் இந்த முகாம் வரு 9–ந் தேதி தொடங்கி 22–ந் தேதி வரை நடக்கிறது.

நமது மாவட்டத்திற்கு 1 லட்சத்து 50 ஆயிரம் டோஸஸ் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு கோழிக்கழிச்சல் நோய் தடுப்பூசி மருந்து பெறப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள அனைத்து கால்நடை நிலையங்களுக்கும் மேற்படி தடுப்பூசி மருந்து பிரித்து கொடுக்கப்பட்டுள்ளது.

மேற்படி நாட்களில் கால்நடை மருத்துவர்கள், கால்நடை பராமரிப்புத்துறை ஊழியர்கள் மூலம் குறிப்பிட்ட தேதிகளில் குறிப்பிட்ட கிராமங்களில் நடத்திட உரிய அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்களது அருகில் செயல்பட்டு வரும் கால்நடை மருந்தகம், கால்நடை நிலையங்களை அணுகி தங்களது கிராமத்தில் முகாம் நடைபெறும் நாளினை அறிந்து கொள்வதுடன், தாங்கள் வளர்க்கும் கோழிகளுக்கு கோழிக்கழிச்சல் நோய் தடுப்பூசி போட்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Next Story