இன்று நடக்கிறது; அம்மா திட்ட சிறப்பு முகாம்
குமரி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–
நாகர்கோவில்,
தமிழக அரசின் அம்மா திட்டத்தின் 5–ம் கட்ட சிறப்பு முகாம் இன்று (வெள்ளிக்கிழமை) குமரி மாவட்டத்தில் உள்ள 6 தாலுகாக்களில் நடக்கிறது.
அதன்படி, அகஸ்தீஸ்வரம் தாலுகா ராஜாக்கமங்கலம் அரசு தொடக்கப்பள்ளியிலும், தோவாளை தாலுகா குமரன்புதூர் சமுதாய நலக்கூடத்திலும், கல்குளம் தாலுகா பெருஞ்சிலம்பு அரசு உயர்நிலைப்பள்ளியிலும், திருவட்டார் தாலுகாவில் திற்பரப்பு பேரூராட்சி அலுவலகத்திலும், விளவங்கோடு தாலுகாவில் மாஞ்சாலுமூடு, அரசு தொடக்கப்பள்ளியிலும், கிள்ளியூர் தாலுகாவில் புதுக்கடை அரசு நடுநிலைப்பள்ளியிலும் காலை 10 மணியளவில் நடைபெற உள்ளது.
இந்த முகாமில் இலவச வீட்டுமனைபட்டா, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட சமூக பாதுகாப்பு திட்டங்கள், பட்டா மாறுதல், உழவர் பாதுகாப்பு அட்டை, பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள், குடும்ப அட்டை, வருவாய் தாசில்தார் அதிகாரத்திற்குட்பட்ட நில தாவாக்கள், குடிநீர் மற்றும் சாலை வசதி போன்ற பொதுவான மனுக்களை பொதுமக்கள் அளித்து தீர்வு காணலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story