நந்தனம் சிக்னல் பகுதியில் போக்குவரத்து மாற்றம் சோதனை முறையில் அமலுக்கு வந்தது


நந்தனம் சிக்னல் பகுதியில் போக்குவரத்து மாற்றம்   சோதனை முறையில் அமலுக்கு வந்தது
x
தினத்தந்தி 7 Feb 2020 3:30 AM IST (Updated: 6 Feb 2020 10:32 PM IST)
t-max-icont-min-icon

சென்னை அண்ணாசாலை மற்றும் நந்தனம் சந்திப்பில் வாகன போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

சென்னை போக்குவரத்து போலீசார் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சென்னை அண்ணாசாலை மற்றும் நந்தனம் சந்திப்பில் இதுவரையில் சேமியர்ஸ் சாலையில் இருந்து வெங்கட்நாராயணா சாலைக்கும், வெங்கட் நாராயணா சாலையில் இருந்து சேமியர்ஸ் சாலைக்கும் எதிர் எதிரே வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டது. நேற்று முன்தினம் முதல் அங்கு வாகன போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, சேமியர்ஸ் சாலையில் இருந்து செல்லும் வாகனங்கள் அண்ணா சாலையில் இடது பக்கமும், வலது பக்கமும் செல்லலாம். சேமியர்ஸ் சாலையில் இருந்து வெங்கட் நாராயணா சாலைக்கும் வாகனங்கள் நேரடியாக செல்லலாம். அதேநேரத்தில் வெங்கட் நாராயணா சாலையில் இருந்து சேமியர்ஸ் சாலைக்கு நேரடியாக வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை. வெங்கட் நாராயணா சாலையில் இருந்து வரும் வாகனங்கள் தெற்கு போக் சாலை மற்றும் ம.பொ.சிவஞானம் சிலை சந்திப்பை அடைந்து, அந்த வழியாக வாகன ஓட்டிகள் தங்கள் செல்ல விரும்பும் இடத்திற்கு செல்லலாம். சோதனை முறையில் இந்த மாற்றம் அமலுக்கு வந்துள்ளது.

இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Next Story