சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் மராட்டிய அரசு சார்பில் சிறப்பு நிகழ்ச்சி சென்னையில் நடந்தது
மராட்டிய அரசின் சுற்றுலாத்துறை சார்பில் சென்னையில் அந்த மாநில பாரம்பரிய கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.
சென்னை,
மராட்டிய மாநில அரசு சுற்றுலாவை மேம்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி ஒவ்வொரு மாநிலத்திலும் அந்த மாநில சுற்றுலாத்துறை சார்பில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் மராட்டிய அரசின் சுற்றுலாத்துறை சார்பில் சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் ‘ரோடு ஷோ’ (சுற்றுலா இடங்களை காட்சிப்படுத்துதல், அந்த மாநில பாரம்பரிய கலைநிகழ்ச்சிகள்) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மராட்டிய மாநில சுற்றுலாத்துறை இயக்குனர் திலிப் கவுடா, மேலாளர் சுஷில் பவார், தமிழகத்தை சேர்ந்த சுற்றுலா ஏற்பட்டாளர்கள், முகவர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் மராட்டிய மாநில சுற்றுலாத்துறை மந்திரி ஆதித்ய தாக்கரே காணொலி காட்சி மூலம் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-
இந்தியாவின் இதய நுழைவுவாயிலாக மராட்டிய மாநிலம் திகழ்கிறது. குயோரியா தேவாலயம், ப்ளோரா நீரூற்று, எலிபெண்டா குகைகள் உள்பட ‘யூனஸ்கோ’ அமைப்பால் தேர்வு செய்யப்பட்டுள்ள உலகளாவிய பாரம்பரிய சின்னங்கள் பல மராட்டிய மாநிலத்தில் உள்ளன.
ஜூகு, மால்வன், முராட் ஜன்ஜிரா, கஷிட் போன்ற கடற்கரை பகுதிகளில் கடல்நீரில் திகைப்பூட்டும் நிகழ்வுகள் இருக்கின்றன. நீரில் மிதந்தபடியே பங்கேற்கும் ‘ஸ்குபா டைவிங்’, பாய்மரகு படகு போட்டி விளையாட்டுகள் விளையாடலாம்.
எனவே மராட்டிய மாநிலத்தின் எழில்மிகு அழகை கண்டுகளிக்கவும், சுற்றி பார்த்து ரசிக்கவும் தமிழக மக்களுக்கு அழைப்பு விடுகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story