வெள்ளோடு சரணாலயத்தில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி இந்த மாதம் நடக்கிறது
வெள்ளோடு பறவைகள் சரணாலயத்தில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி இ்ந்த மாதம்(பிப்ரவரி) நடைபெற இருப்பதாக மாவட்ட வன அதிகாரி விஸ்மிஜூ விஸ்வநாதன் கூறினார்.
ஈரோடு,
ஈரோடு மாவட்டத்தில் உள்ள வெள்ளோடு பகுதியில் பறவைகள் சரணாலயம் அமைந்து உள்ளது. தென்முகம் வெள்ளோடு கிராமத்தின் ஒரு பகுதியாக அமைந்து உள்ள இந்த பறவைகள் சரணாலயம் 77 ஹெக்டேர் பரப்பளவு கொண்டது. மிகப்பெரிய வெள்ளோடு ஏரியை மையமாக கொண்டு செயல்பட்டு வரும் சரணாலயம் வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலாத்தலங்களில் ஒன்றாக வெள்ளோடு பறைவைகள் சரணாலயம் உள்ளது. இங்கு சுற்றுலா பயணிகள், பறவைகள் ஆர்வலர்களை கவரும் வகையில் பல்வேறு மேம்பாட்டு பணிகள் நடந்து வருகின்றன. இந்தநிலையில் இந்த (பிப்ரவரி) மாதத்தில் பறவைகள் கணக்கெடுப்பு பணி நடைபெற இருக்கிறது.
கணக்கெடுக்கும் பணி
இதுகுறித்து ஈரோடு மாவட்ட வன அதிகாரி விஸ்மிஜூ விஸ்வநாதன் கூறியதாவது:-
வெள்ளோடு பறவைகள் சரணாலயத்தை மக்கள் முழுமையாக பார்த்து ரசிக்கும் வகையில் திட்டப்பணிகள் நடந்து வருகிறது. தமிழக அரசு இதற்காக ரூ.4 கோடியே 90 லட்சம் நிதி ஒதுக்கி பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. பறவை ஆர்வலர்களுக்கான பார்வை மாடம், பொழுது போக்கு அம்சங்களுடன் சரணாலயம் புதுப்பொலிவு பெற்று வருகிறது. இந்தநிலையில் தமிழகம் முழுவதும் உள்ள பறவைகள் சரணாலயங்களில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
தற்போது நிர்வாக காரணங்களுக்காக தேதி மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. அதன்படி வருகிற 28-ந் தேதி மற்றும் 29-ந் தேதி 2 நாட்கள் பறவைகள் கணக்கெடுக்கும் பணி நடைபெறுகிறது. வெள்ளோடு பறவைகள் சரணாலயத்தில் வனத்துறை அதிகாரிகள், பணியாளர்கள், பறவை ஆர்வலர்கள், வன உயிரியல் புகைப்பட நிபுணர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர், கல்லூரி மாணவ-மாணவிகள் கொண்ட குழுவினர் இந்த பணியில் ஈடுபட உள்ளனர்.
முகாம்
கணக்கெடுக்கும் பணி நடைபெறும் நாளில் 5 பேர் கொண்ட பல்வேறு குழுக்கள் சரணாலயத்தின் பகுதிகளில் கண்காணிப்பில் ஈடுபடும். அதிகாலை பறவைகள் தங்கள் கூட்டைவிட்டு வெளியேறும் நேரத்துக்கு முன்னதாகவே கணக்கிடும் குழுவினர் குறிப்பிட்ட பகுதிகளில் முகாம் அமைத்து தங்கி இருப்பார்கள்.
காலை 8 மணிவரை எத்தனை பறவைகள் புறப்பட்டு வெளியே செல்கின்றன என்று கணக்கிடப்படும். பின்னர் மாலை 5 மணியில் இருந்து 6.30 மணிவரை அல்லது சூரியன் மறையும் வரை அதே இடத்தில் அந்தந்த குழுவினர் வெளியில் இருந்து திரும்ப வரும் பறவைகளை கணக்கெடுப்பார்கள். மறுநாளும் இதுபோன்ற கணக்கெடுப்பு நடைபெறும். அந்த எண்ணிக்கை கணக்கிடப்பட்டு புள்ளிவிவரங்கள் அடிப்படையில் எத்தனை பறவைகள் உள்ளன என்று அறிவிக்கப்படும்.
இவ்வாறு மாவட்ட வன அதிகாரி விஸ்மிஜூ விஸ்வநாதன் கூறினார்.

Related Tags :
Next Story