கவர்னர் கிரண்பெடிக்கு ஏனாமில் எதிர்ப்பு கருப்பு பலூன்களை பறக்கவிட்டனர்


கவர்னர் கிரண்பெடிக்கு ஏனாமில் எதிர்ப்பு கருப்பு பலூன்களை பறக்கவிட்டனர்
x
தினத்தந்தி 7 Feb 2020 4:15 AM IST (Updated: 7 Feb 2020 2:36 AM IST)
t-max-icont-min-icon

கவர்னர் கிரண்பெடிக்கு எதிர்ப்பு தெரிவித்து ஏனாமில் பொதுமக்கள் கருப்பு பலூன்களை பறக்கவிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுச்சேரி,

வளர்ச்சிப்பணிகளை ஆய்வு செய்ய புதுவை கவர்னர் கிரண்பெடி 2 நாள் பயணமாக ஏனாம் சென்றுள்ளார். ரெயில் மூலம் சாமல்கோட் சென்ற அவர் அங்கிருந்து கார் மூலம் ஏனாம் சென்றார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஏனாம் சென்ற கவர்னர் கிரண்பெடிக்கு அப்பகுதி மக்கள் கருப்பு பலூன் மற்றும் கருப்புக்கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்தநிலையில் நேற்றும் ஏனாம் தொகுதி மக்கள் கருப்பு பலூன்களை பறக்கவிட்டும், கருப்புக் கொடியேற்றியும் கவர்னருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு தங்களது எதிர்ப்பினை தெரிவித்ததால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவும் தனது எதிர்ப்பினை தெரிவிக்கும் விதமாக தனது வீட்டில் கருப்பு உடை அணிந்து கையில் கருப்பு பலூனை வைத்துக்கொண்டு அமர்ந்திருந்தார்.

இலவச அரிசிக்கு பதிலாக பணம் வழங்குவதால் ஏழைகளுக்கு சுமை ஏற்பட்டுள்ளது, மீனவர்களுக்கு நிவாரண நிதி வழங்கவேண்டும், மணல் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவேண்டும், ஏனாம் வெள்ளத்தடுப்பு சுவரை கட்ட வேண்டும் என்பன போன்ற வாசகங்கள் அடங்கிய கோரிக்கை அட்டைகளை கைகளில் ஏந்தியபடி கவர்னர் வரும் பாதைகளில் நின்று எதிர்ப்புகளை தெரிவித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Next Story