தூத்துக்குடியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்


தூத்துக்குடியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
x
தினத்தந்தி 7 Feb 2020 3:21 AM IST (Updated: 7 Feb 2020 3:21 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த ஆக்கிரமிப்புகள் நேற்று அகற்றப்பட்டன.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் போக்குவரத்துக்கு இடையூறாக ஆக்கிரமித்து கட்டப்பட்டு உள்ள கட்டிடங்களை மாநகராட்சி அதிகாரிகள் அவ்வப்போது இடித்து அகற்றி வருகிறார்கள்.

இந்த நிலையில், தூத்துக்குடி நந்தகோபாலபுரம் மெயின் ரோடு, அழகேசபுரம், கந்தசாமிபுரம் பிரதான சாலை, அம்பேத்கர் நகர் ஆகிய பகுதிகளில் போக்குவரத்துக்கு இடையூறாக ஆக்கிரமிப்புகள் இருப்பதாக மாநகராட்சி அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன.

இதையடுத்து மாநகராட்சி உதவி பொறியாளர்கள் தலைமையில் நேற்று காலையில் அந்த பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடந்தது. அப்போது அங்கிருந்த ஆக்கிரமிப்புகளை பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்றினர்.

இந்த ஆக்கிரமிப்பு அகற்றத்தையொட்டி, அங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.

Next Story