தமிழக-கேரள எல்லையில் மீன்கழிவுகளுடன் லாரியை நிறுத்தி விட்டு டிரைவர் தப்பி ஓட்டம்
தமிழக-கேரள எல்லையில் மீன்கழிவுகளுடன் லாரியை நிறுத்தி விட்டு டிரைவர் தப்பி ஓடிவிட்டார்.
செங்கோட்டை,
தமிழக-கேரள எல்லையான தென்காசி மாவட்டம் புளியரை சோதனை சாவடியில் நேற்று முன்தினம் இரவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக கேரளாவில் இருந்து வந்த ஒரு லாரியை நிறுத்த சைகை காட்டினர். ஆனால் அந்த லாரி நிற்காமல் வேகமாக சென்றது. உடனடியாக போலீசார் அந்த லாரியை பின் தொடர்ந்து சென்று, செங்கோட்டை அருகே அந்த லாரியை மடக்கி நிறுத்தி சோதனை நடத்தினர். அந்த லாரியில் தமிழக எல்லையில் கொட்டுவதற்காக மீன் கழிவுகள் கொண்டு வந்தது தெரியவந்தது.
அந்த லாரி டிரைவரை போலீசார் எச்சரித்து, மீண்டும் கேரளாவுக்கு கொண்டு செல்லுமாறு திருப்பி அனுப்பி வைத்தனர். ஆனால் டிரைவர் கேரளாவுக்கு லாரியை ஓட்டிச் செல்வது போல் போக்கு காட்டி விட்டு, தமிழக-கேரள எல்லையான எஸ்.வளைவு பகுதியில் லாரியை நிறுத்தி விட்டு தப்பி ஓடிவிட்டார்.
இதுகுறித்த தகவல் அறிந்த செங்கோட்டை தாசில்தார் கங்கா, வட்டார வளர்ச்சி அலுவலர் அருணாதேவி, புளியரை ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் மாரீஸ்வரி, சுகாதார ஆய்வாளர்கள் வெங்கடேசன், செந்தில்குமார், கிராம நிர்வாக அலுவலர் விஜயகுமார் மற்றும் போலீஸ் அதிகாரிகள் எஸ்.வளைவு பகுதிக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
அங்கு மீன்கழிவுகளுடன் நிறுத்தப்பட்டு இருந்த லாரியை சுற்றி சுகாதாரத்துறையினர் மருந்து தெளித்தனர். அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசியது. இந்த லாரியை விரைவாக அங்கிருந்து அப்புறப்படுத்துவது தொடர்பாக போலீஸ் அதிகாரிகளும், வருவாய்த்துறை அதிகாரிகளும் தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர். மேலும் அந்த லாரியின் பதிவு எண்ணை கொண்டு உரிமையாளர் யார்? லாரியை நிறுத்திவிட்டு தப்பி ஓடிய டிரைவர் யார்? என்பது குறித்து புளியரை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story