விதான சவுதா-விகாச சவுதாவில் புதிய மந்திரிகளுக்கு அலுவலக அறைகள் ஒதுக்கீடு 4 நாட்களுக்கு பிறகு இலாகாக்கள் அறிவிக்கப்படும் என தகவல்


விதான சவுதா-விகாச சவுதாவில்   புதிய மந்திரிகளுக்கு அலுவலக அறைகள் ஒதுக்கீடு   4 நாட்களுக்கு பிறகு இலாகாக்கள் அறிவிக்கப்படும் என தகவல்
x
தினத்தந்தி 7 Feb 2020 5:05 AM IST (Updated: 7 Feb 2020 5:05 AM IST)
t-max-icont-min-icon

விதானசவுதா, விகாச சவுதாவில் புதிய மந்திரி களுக்கு அலுவலக அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மேலும் இன்னும் 4 நாட் களுக்கு பிறகு அவர் களுக்கு இலாகாக்கள் ஒதுக்கப்பட்டு அறிவிக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

பெங்களூரு, 

கர்நாடக மந்திரிசபை நேற்று விரிவாக்கம் செய்யப்பட்டது. இதில் ரமேஷ் ஜார்கிகோளி உள்பட 10 எம்.எல்.ஏ.க்கள் மந்திரிகளாக பதவி ஏற்றனர். அவர்களுக்கு விதான சவுதா மற்றும் விகாசசவுதாவில் அலுவலக அறைகள் ஒதுக்கப் பட்டுள்ளன. அதன் விவரம் வருமாறு:-

புதிய மந்திரிகள் எஸ்.டி.சோமசேகருக்கு விகாசசவுதாவில் 38, 39-வது எண் கொண்ட அலுவலக அறைகள், ரமேஷ் ஜார்கிகோளிக்கு விதான சவுதாவின் 3-வது மாடியில் 342-342ஏ அறைகள், ஆனந்த்சிங்குக்கு விகாசசவுதாவில் 36-37 எண் கொண்ட அறைகள், கே.சுதாகருக்கு விதான சவுதாவில் 3-வது மாடியில் 339-339ஏ அறைகள்.

இலாகா ஒதுக்கப்படும்

பைரதி பசவராஜிக்கு விதான சவுதாவில் 337-337ஏ அறைகள், சிவராம் ஹெப்பாருக்கு விதான சவுதாவில் 258-257ஏ அறைகள், பி.சி.பட்டீலுக்கு விகாசசவுதாவில் 4-வது மாடியில் 406-407 அறைகள், கோபாலய்யாவுக்கு விதான சவுதாவில் 2-வது மாடியில் 252-253ஏ அறைகள், நாராயணகவுடாவுக்கு விகாசசவுதாவில் 234-235 அறைகள், ஸ்ரீமந்த்பட்டீலுக்கு விதான சவுதாவில் உள்ள 3-வது மாடியில் 301-301ஏ அறைகள் ஒதுக்கப் பட்டுள்ளன.

மேலும் புதிய மந்திரி களுக்கு அடுத்த 4 நாட்களுக்கு பிறகு இலாகாக்கள் ஒதுக்கப்பட்டு அறிவிக்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது. பா.ஜனதா மேலிட தலைவர்களுடன் முதல்-மந்திரி எடியூரப்பா கலந்து ஆலோசனை செய்த பிறகே இலாகாக்கள் ஒதுக்கீடு பணி மேற்கொள்ளப்படும் என்று கூறப்படுகிறது.

Next Story