மின்னணு கழிவுகளை மறுசுழற்சிக்கு அனுப்புவதை உறுதி செய்ய வேண்டும் - அதிகாரிகளுக்கு, கலெக்டர் உத்தரவு
அரசு-தனியார் நிறுவனங்களிடம் இருந்து சேகரிக்கப்படும் மின்னணு கழிவுகளை மறுசுழற்சிக்கு அனுப்பப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு, கலெக்டர் விஜயலட்சுமி உத்தரவிட்டுள்ளார்.
திண்டுக்கல்,
தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம், பள்ளி கல்வித்துறை, திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் ஆகியவை சார்பில் மின்னணு கழிவுகள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் குறித்த பயிற்சி முகாம் திண்டுக்கல் அட்சுதா அகாடமி பள்ளியில் நடந்தது. இதற்கு கலெக்டர் விஜயலட்சுமி தலைமை தாங்கி பேசினார்.
அப்போது மின்னணு கழிவுகளை பாதுகாப்பான முறையில் எவ்வாறு அப்புறப்படுத்த வேண்டும் என்றும், பிளாஸ்டிக் கழிவுகளை தரம் பிரித்து எப்படி அகற்றுவது என்றும் விளக்கமளித்தார். அதையடுத்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு கலெக்டர் சில உத்தரவுகளை பிறப்பித்தார். அதன் விவரம் வருமாறு:-
செல்போன்கள், கம்ப்யூட்டர், டி.வி. உள்ளிட்ட பல்வேறு மின்சாதன பொருட் களை நாம் அன்றாடம் பயன்படுத்துகிறோம். இந்த மின்னணு சாதனங்கள் அவற்றின் ஆயுட்காலம் முடிந்தவுடன் மின்னணு கழிவுகளாக மாறிவிடும். இந்த மின்னணு கழிவுகளை வாடிக்கையாளர்களிடம் இருந்து தயாரிப்பாளர்களே திரும்ப பெற்று மறுசுழற்சிக்கு அனுப்பி வைக்க வேண்டும். ஏனென்றால் தயாரிப்பாளர்களுக்கே நீடித்த பொறுப்பு உள்ளது. இது அவர்களின் கடமையும் ஆகும்.
மேலும் மின்னணு கழிவுகளை கையாளுதல், பிரித்தெடுத்தல் மற்றும் மறுசுழற்சிக்கு அனுப்பி வைத்தல் பணிக்காக மத்திய மாசுக்கட்டுப்பாடு வாரியத்திடம் தயாரிப்பாளர்கள் முறையாக அனுமதி பெற வேண்டும். பின்னர் மாநில மாசுக்கட்டுப்பாடு வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்ட மறுசுழற்சி தொழிற்சாலைகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும். மின்னணு சாதனங்களின் தயாரிப்பாளர்கள், அரசு- தனியார் நிறுவனங் களில் இருந்து சேகரிக்கும் மின்னணு கழிவுகளை முறையாக மறுசுழற்சிக்கு அனுப்புகிறார்களா? என்பதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து உறுதி செய்ய வேண்டும் என்று கலெக்டர் உத்தரவிட்டார்.
Related Tags :
Next Story