சமயநல்லூர் அருகே, வடமாடு மஞ்சு விரட்டு; 9 பேர் படுகாயம்


சமயநல்லூர் அருகே, வடமாடு மஞ்சு விரட்டு; 9 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 7 Feb 2020 1:50 PM IST (Updated: 7 Feb 2020 1:50 PM IST)
t-max-icont-min-icon

சமயநல்லூர் அருகே நடந்த வடமாடு மஞ்சு விரட்டில் 9 பேர் படுகாயம் அடைந்தனர்.

வாடிப்பட்டி,

சமயநல்லூர் அருகே கோவில் பாப்பாக்குடி சோனை கருப்புச்சாமி கோவில் தை மாத உற்சவ திருவிழாவையொட்டி வடமாடு மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி நடந்தது. கோவில்பாப்பாக்குடி மந்தை திடலில் இந்த மஞ்சுவிரட்டு நடைபெற்றது. அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமை தாங்கி மஞ்சுவிரட்டை தொடங்கி வைத்தார். பஞ்சாயத்து தலைவர் சரவணன், ஒன்றிய கவுன்சிலர் செல்லப்பாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் முதலில் கிராம கோவில் மாடு அவிழ்க்கப்பட்டு பின்னர் கிராம மரியாதைக்காரர்களின் 13 மாடுகள் 20 நிமிடத்திற்கு தலா ஒன்று என அவிழ்த்து விடப்பட்டது. இதில் ஏராளமான மாடு பிடி வீரர்கள் கலந்து கொண்டனர். இதில் 9 பேர் படுகாயம் அடைந்தனர். 4 பேர் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.


Next Story