அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள்; கலெக்டர் வழங்கினார்


அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள்;  கலெக்டர் வழங்கினார்
x
தினத்தந்தி 8 Feb 2020 3:30 AM IST (Updated: 7 Feb 2020 6:23 PM IST)
t-max-icont-min-icon

பொம்மிகுப்பம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை கலெக்டர் சிவன்அருள் வழங்கினார்

திருப்பத்தூர், 

திருப்பத்தூர் தாலுகா பொம்மிகுப்பம் அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது. பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் விஜயகுமார் தலைமை தாங்கினார். தலைமையாசிரியர் முருகன் வரவேற்றார். பெற்றோர் ஆசிரியர் கழக துணை தலைவர் வாதாபி முன்னிலை வகித்தார். திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் சிவன்அருள் கலந்து கொண்டு 113 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கி பேசினார்.

நிகழ்ச்சியில் மாணவ– மாணவிகள், பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் உதவி தலைமையாசிரியை தனசேகரன் நன்றி கூறினார். பொம்மிகுப்பம் ஊராட்சி சார்பில் பள்ளிக்கு வழங்கும் குடிநீர் சரியாக வரவில்லை என கூறினார்கள். உடனடியாக ஊராட்சி செயலாளரை அழைத்த கலெக்டர் மோட்டர் பம்பை சரிசெய்து குடிநீர் வழங்க உத்தரவிட்டார். பின்னர் அந்த பகுதியில் உள்ள அங்கன்வாடிக்கு சென்ற கலெக்டர் குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவுகளை சாப்பிட்டு பார்த்தார். குழந்தைகளிடம் சரியாக உணவு வழங்கப்படுகிறதா என கேட்டறிந்தார். தொடர்ந்து சத்துணவு கூடங்களையும் நேரில் சென்று பார்வையிட்டார்.

Next Story