தி.மு.க. சார்பில் முஸ்லிம் மக்களிடம் கையெழுத்து பெறும் நிகழ்ச்சி


தி.மு.க. சார்பில் முஸ்லிம் மக்களிடம் கையெழுத்து பெறும் நிகழ்ச்சி
x
தினத்தந்தி 8 Feb 2020 2:45 AM IST (Updated: 7 Feb 2020 8:40 PM IST)
t-max-icont-min-icon

குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி தி.மு.க.சார்பில் முஸ்லிம் மக்களிடம் கையெழுத்து பெறும் நிகழ்ச்சி நடைபெற்றது.

திருவண்ணாமலை, 

குடியுரிமை சட்டத்தை திரும்பப்பெறக்கோரி திருவண்ணாமலை மண்டித்தெருவில் உள்ள மசூதி அருகில் முஸ்லிம்களிடம் தி.மு.க.சார்பில் கையெழுத்து பெறும் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட துணை செயலாளர் சுந்தரேசன், தலைமை செயற்குழு உறுப்பினர் ஸ்ரீதரன், மாவட்ட பொருளாளர் பன்னீர்செல்வம், தொழிலதிபர் எம்.இ.ஜமாலுதின், நகர செயலாளர் கார்த்திவேல்மாறன், ம.தி.மு.க. மாநில மாணவர் அணி செயலாளர் எல்.பாசறைபாபு உள்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சிக்கு தி.மு.க. உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினரும், எம்.எல்.ஏ.வுமான எ.வ.வேலு தலைமை தாங்கி தொழுகை முடித்து திரும்பிய முஸ்லிம் மக்களிடம் கையெழுத்து பெறும் நிகழ்வை தொடங்கி வைத்தார். வியாபாரிகளும், பொதுமக்களும் ஆர்வத்துடன் கையெழுத்திட்டு ஆதரவு தெரிவித்தனர். நிகழ்ச்சியில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story