‘அசில்’ இன நாட்டுக்கோழிகள் வழங்கும் விழா


‘அசில்’ இன நாட்டுக்கோழிகள் வழங்கும் விழா
x
தினத்தந்தி 8 Feb 2020 3:30 AM IST (Updated: 7 Feb 2020 8:52 PM IST)
t-max-icont-min-icon

225 பயனாளிகளுக்கு ரூ.4½ லட்சத்தில் ‘அசில்’ இன நாட்டுக்கோழிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

சோளிங்கர், 

சோளிங்கரில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் 2019-20-ம் ஆண்டிற்கான கோழி அபிவிருத்தி திட்டத்தின்கீழ் விலையில்லா ‘அசில்’ இன நாட்டுக்கோழி வழங்குவதற்கு 225 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டிருந்தனர். அவர்களுக்கு நாட்டுக்கோழிகள் வழங்கும் நிகழ்ச்சி சோளிங்கர் கால்நடை மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது. 

மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனர் பாஸ்கர் தலைமை தாங்கினார். அ.தி.மு.க. நகர செயலாளர் ராமு, ஒன்றிய செயலாளர் பெல் கார்த்திகேயன், பேரூராட்சி முன்னாள் தலைவர் விஜயன், ஜெயலலிதா பேரவை ஒன்றிய செயலாளர் நரசிம்மன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு விருந்தினராக சோளிங்கர் சம்பத் எம்.எல்.ஏ.கலந்து கொண்டு 225 பயனாளிகளுக்கு ரூ.4½ லட்சம் மதிப்பீட்டில் 5 ஆயிரத்து 625 விலையில்லா ‘அசில்’ இன நாட்டுக்கோழிகளை வழங்கினார். நிகழ்ச்சியில் முன்னாள் பேரூராட்சித் தலைவர் விஜயன், கால்நடை உதவி மருத்துவர்கள் வேல்முருகன், சத்யா, கோபிநாத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story