காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஏ.கே.டி. ஆறுமுகம் பிறந்தநாள் நாராயணசாமி வாழ்த்து


காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஏ.கே.டி. ஆறுமுகம் பிறந்தநாள் நாராயணசாமி வாழ்த்து
x
தினத்தந்தி 8 Feb 2020 4:15 AM IST (Updated: 7 Feb 2020 11:47 PM IST)
t-max-icont-min-icon

பிறந்தநாள் கொண்டாடிய காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஏ.கே.டி.ஆறுமுகத்துக்கு முதல்-அமைச்சர் நாராயணசாமி வாழ்த்து தெரிவித்தார்.

புதுச்சேரி,

காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளரான ஏ.கே.டி.ஆறுமுகத்துக்கு நேற்று பிறந்தநாள். இதையொட்டி முத்திரையார்பாளையம் பஜனை மடத்து வீதியில் உள்ள அவரது வீட்டில் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

அங்கு முதல்-அமைச்சர் நாராயணசாமி முன்னிலையில் பிரம்மாண்ட கேக்கினை வெட்டி ஏ.கே.டி.ஆறுமுகம் பிறந்தநாள் கொண்டாடினார்.

அதைத்தொடர்ந்து ஏழைகளுக்கு வேட்டி, சேலை மற்றும் நலத்திட்ட உதவிகளும், மாணவ, மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்களும் வழங்கப்பட்டன. 5 ஆயிரம் பேருக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. இதுதவிர பூத்துறை காப்பகத்தில் அன்னதானம், பிறந்த குழந்தைகளுக்கு மோதிரம் போன்றவை வழங்கப்பட்டன.

பிறந்தநாள் கொண்டாடிய ஏ.கே.டி. ஆறுமுகத்துக்கு சபாநாயகர் சிவக்கொழுந்து, அமைச்சர்கள் நமச்சிவாயம், ஷாஜகான், அரசு கொறடா அனந்தராமன், எம்.எல்.ஏ.க்கள் ஜெயமூர்த்தி, விஜயவேணி, தீப்பாய்ந்தான், காங்கிரஸ் நிர்வாகிகள் சங்கர், சீனுவாசரெட்டியார், கே.எஸ்.பி.ரமேஷ், செந்தில்குமரன் உள்பட பலர் வாழ்த்து தெரிவித்தனர்.

முன்னதாக நேற்று காலை மணக்குள விநாயகர் கோவிலில் தங்கத்தேர் இழுக்கப்பட்டது. மேலும் கருவடிக்குப்பம் சித்தானந்தசாமி கோவில், தர்மாபுரி அங்காளம்மன்கோவில், திரவுபதி அம்மன்கோவில் உள்ளிட்ட கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில் ஏ.கே.டி.ஆறுமுகம் கலந்துகொண்டு சாமிதரிசனம் செய்தார்.

Next Story