ஆசை இருந்தால் சொல்லட்டும் குமாரசாமியை நாங்களே பா.ஜனதாவுக்கு அழைத்து வருகிறோம் புதிய மந்திரி பி.சி.பட்டீல் பேட்டி


ஆசை இருந்தால் சொல்லட்டும்   குமாரசாமியை நாங்களே பா.ஜனதாவுக்கு அழைத்து வருகிறோம்   புதிய மந்திரி பி.சி.பட்டீல் பேட்டி
x
தினத்தந்தி 8 Feb 2020 4:00 AM IST (Updated: 8 Feb 2020 2:09 AM IST)
t-max-icont-min-icon

ஆசை இருந்தால் சொல்லட்டும், குமாரசாமியை நாங்களே பா.ஜனதாவுக்கு அழைத்து வருகிறோம் என்று புதிய மந்திரி பி.சி.பட்டீல் கூறினார்.

பெங்களூரு,

புதிய மந்திரி பி.சி.பட்டீல் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

குமாரசாமி கவலைப்படுவது ஏன்

குமாரசாமி தனது பதவிக்கு ஏற்றபடி பேச வேண்டும். எங்களை தேவையின்றி விமர்சிக்கக்கூடாது. அவர் திடீரென முதல்-மந்திரி ஆனவர். குமாரசாமிக்கு, பா.ஜனதாவில் சேரவேண்டும் என்ற ஆசை இருந்தால் ெசால்லட்டும். நாங்களே அவருடன் பேசி பா.ஜனதாவுக்கு அழைத்து வருகிறோம். பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் பற்றி குமாரசாமி கவலைப்படுவது ஏன்?.

அவர் முதலில் தனது கட்சி எம்.எல்.ஏ.க்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும். சுப்ரீம் கோர்ட்டு எங்களுக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கியது. நாங்கள் மந்திரியாக தகுதி இல்லாதவர்கள் என்று சித்தராமையா விமர்சித்துள்ளார். நாங்கள் இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று மந்திரி ஆகியுள்ளோம். மக்கள் மன்றமும் எங்களை ஆதரித்து தீர்ப்பு கொடுத்துள்ளது.

மகேஷ் குமட்டள்ளிக்கும் பதவி

கோர்ட்டு தீர்ப்பையும் மதிக்க மாட்டோம், ஜனநாயகத்தையும் ஏற்க மாட்டோம் என்றால் எப்படி. சட்டம் படித்துள்ள சித்தராமையா இவ்வாறு பேசுவது சரியல்ல. எம்.டி.பி.நாகராஜ், எச்.விஸ்வநாத் ஆகியோர் எங்களுடன் மந்திரிசபையில் சேர்ந்திருக்க வேண்டும்.

ஆனால் இடைத்தேர்தலில் தோல்வி அடைந்தவர் களுக்கு மந்திரி பதவி வழங்க சட்ட சிக்கல் உள்ளது. வருகிற ஜூன் மாதம் அவர்களை எம்.எல்.சி. ஆக்கி மந்திரி பதவி வழங்குவதாக எடியூரப்பா கூறியுள்ளார். மகேஷ் குமட்டள்ளிக்கும் மந்திரி பதவி கிடைக்கும். நாங்கள் 17 பேரும் ஒற்றுமையாக இருக்கிறோம்.

இவ்வாறு பி.சி.பட்டீல் கூறினார்.

Next Story