முக்கிய ஆவணங்கள் மாயம்: அரசு வக்கீல்கள் அலுவலகத்துக்கு பலத்த பாதுகாப்பு


முக்கிய ஆவணங்கள் மாயம்: அரசு வக்கீல்கள் அலுவலகத்துக்கு பலத்த பாதுகாப்பு
x
தினத்தந்தி 8 Feb 2020 5:20 AM IST (Updated: 8 Feb 2020 5:20 AM IST)
t-max-icont-min-icon

சென்னை ஐகோர்ட்டு வளாகத்தில் உள்ள அரசு வக்கீல்கள் அலுவலகத்துக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

சென்னை, 

சென்னை ஐகோர்ட்டு வளாகத்தில் அரசு தரப்பு வக்கீல்கள் அலுவலகம் உள்ளது. 4 அடுக்கு மாடிகளை கொண்ட இந்த கட்டிடத்தில் வழக்கு தொடர்பான தமிழக அரசு ஆவணங்களும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

இந்தநிலையில், தமிழக வனத்துறை வழக்குகளின் சொத்துகள் தொடர்பான முக்கிய ஆவணங்கள் இந்த அலுவலகத்தில் இருந்து மாயமானது. அதேபோல, இந்த அலுவலக கட்டிடத்துக்குள் நுழைந்து வெளிநபர் ஒருவர் வழக்கு ஆவணங்களை திருடி சென்றபோது, கையும் களவுமாக அங்குள்ள ஊழியர்களிடம் சிக்கினார்.

இதுபோல ஏராளமான பிரச்சினைகளை இந்த அலுவலகம் சந்தித்தது. இதனால், அரசு வக்கீல்கள் அலுவலகம் சார்பில் பாதுகாப்பு கேட்டு போலீஸ் கமிஷனருக்கு கடிதம் அனுப்பப்பட்டது. இதையடுத்து இந்த அலுவலக கட்டிடத்துக்கு நேற்று முதல் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இங்கு வருபவர்கள் முறையான அடையாள அட்டை காண்பிக்கவேண்டும். அவர் யாரை சந்திக்க செல்கிறார்? எத்தனை மணிக்கு அலுவலகத்துக்குள் செல்கிறார்? எப்போது வெளியில் வருகிறார்? என்பது உள்ளிட்ட விவரங்களை அங்குள்ள பதிவேட்டில் குறிப்பிட்ட பின்னரே அவர்களை போலீசார் அனுமதிக்கின்றனர்.

Next Story