குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாணவர் பேரவை தீர்மானம்
‘குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும்’ என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாணவர் பேரவை தீர்மானம் நிறைவேற்றியது.
சென்னை,
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாணவர் பேரவை (எம்.எஸ்.எப்.) சார்பில் குடியுரிமை பாதுகாப்பு மாநாடு, சென்னை மண்ணடியில் நடந்தது. பேரவையின் மாநிலத்தலைவர் மு.அன்சாரி தலைமை தாங்கினார். கட்சியின் மாநில பொதுச்செயலாளர் கே.ஏ.எம்.முகமது அபுபக்கர் எம்.எல்.ஏ., மக்களவை கட்சி கொறடா கே.நவாஸ்கனி எம்.பி. ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினர்களாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் கே.எம்.காதர் மொய்தீன், காங்கிரஸ் முன்னாள் எம்.பி. பீட்டர் அல்போன்ஸ் ஆகியோர் கலந்துகொண்டனர். மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
கருப்பு சட்டங்களுக்கு எதிராக...
* மதசார்பின்மைக்கும், இந்திய அரசியலமைப்புக்கும் எதிரான குடியுரிமை திருத்த சட்டத்தை உடனடியாக திரும்பப்பெற வேண்டும்.
* குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக அறவழியில் போராட்டம் நடந்த டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம், ஜாமியா மில்லியா பல்கலைக்கழகம், அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழக மாணவர்கள் மீது வன்முறையை கட்டவிழ்த்துவிட்ட போலீசாருக்கும், துணை போன மத்திய-மாநில அரசுக்கும் கண்டனம் தெரிவிக்கப்படுகிறது.
* மதரீதியாக மக்களை பிரிக்கும் இச்சட்டத்துக்கு எதிராக போராட்டம் நடத்தி உயிரிழந்தோருக்கு இரங்கல் தெரிவிக்கப்படுகிறது.
* குடியுரிமை திருத்த சட்டம், தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்பு, தேசிய குடிமக்கள் பதிவேடு போன்ற கருப்பு சட்டங்களுக்கு எதிராக தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும்.
மேற்கண்டவாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Related Tags :
Next Story