கனடா பெண்ணை மணந்த புதுச்சேரி என்ஜினீயர் இந்து முறைப்படி திருமணம் நடந்தது


கனடா பெண்ணை மணந்த புதுச்சேரி என்ஜினீயர் இந்து முறைப்படி திருமணம் நடந்தது
x
தினத்தந்தி 8 Feb 2020 6:01 AM IST (Updated: 8 Feb 2020 6:01 AM IST)
t-max-icont-min-icon

புதுவையை சேர்ந்த என்ஜினீயர் கனடா நாட்டு பெண்ணை இந்து முறைப்படி திருமணம் செய்துகொண்டார்.

புதுச்சேரி,

புதுவை வீமநகரை சேர்ந்தவர் லோகநாதன். இவரது மனைவி வளர்மதி. இவர்களது மகன் ஞானசம்பந்தம் என்ற சதீஷ்.

புதுவையில் பிளஸ்-2 வரை படித்த சதீஷ் கனடா சென்று என்ஜினீயரிங் படித்தார். அங்கு அவருடன் படித்த கனடாவை சேர்ந்த சமந்தா புலார்டு பேட்டர்சன் என்ற பெண்ணை காதலித்தார்.

படிப்பு முடிந்ததும் இருவருக்கும் ஒரே நிறுவனத்தில் வேலைகிடைத்தது. அவர்களது காதலும் தொடர்ந்தது. இவர்களது காதலுக்கு இருவரது குடும்பத்திலும் பச்சைக்கொடி காட்டப்பட்டது.

இதையடுத்து திருமணம் செய்துகொள்ள காதலர்கள் முடிவு செய்தனர். இவர்களது திருமணம் பெரியவர்களால் நிச்சயிக்கப்பட்டு புதுவை சொக்கநாதன் பேட்டையில் உள்ள தமிழ் திருமண நிலையத்தில் நேற்று நடந்தது.

இந்து முறைப்படி மணப்பெண் சமந்தா புலார்டுபேட்டர்சன் கூரைப்புடவையும் ஞானசம்பந்தம் பட்டு சட்டை - வேட்டியும் அணிந்து இருந்தனர்.

இந்த திருமணத்தில் கனடாவில் இருந்து மணமகளின் பெற்றோரான வின்சென்ட் பேட்டர்சன், சன்டல் புலார்டு பேட்டர்சன் ஆகியோர் வந்திருந்தனர்.

Next Story