செஞ்சிலுவை சங்க நூற்றாண்டு விழாவையொட்டி பாளையங்கோட்டையில் மோட்டார் சைக்கிள் பேரணி கலெக்டர் ஷில்பா தொடங்கி வைத்தார்


செஞ்சிலுவை சங்க நூற்றாண்டு விழாவையொட்டி பாளையங்கோட்டையில் மோட்டார் சைக்கிள் பேரணி  கலெக்டர் ஷில்பா தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 9 Feb 2020 4:00 AM IST (Updated: 8 Feb 2020 7:08 PM IST)
t-max-icont-min-icon

இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் நூற்றாண்டு விழாவையொட்டி, பாளையங்கோட்டையில் மோட்டார் சைக்கிள் பேரணி நடந்தது.

நெல்லை, 

இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் நூற்றாண்டு விழாவையொட்டி பாளையங்கோட்டையில் மோட்டார் சைக்கிள் பேரணியை கலெக்டர் ஷில்பா தொடங்கி வைத்தார்.

மோட்டார் சைக்கிள் பேரணி 

இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் நூற்றாண்டு விழாவையொட்டி, பாளையங்கோட்டையில் மோட்டார் சைக்கிள் பேரணி நடந்தது. செஞ்சிலுவை சங்க தலைவர் சார்லஸ் பிரேம்குமார் தலைமை தாங்கினார். கலெக்டர் ஷில்பா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கொடியசைத்து பேரணியை தொடங்கி வைத்தார்.

பாளையங்கோட்டை செஞ்சிலுவை சங்க அலுவலகத்தின் முன்பு இருந்து தொடங்கிய பேரணி, மார்க்கெட், சமாதானபுரம், பாளையங்கோட்டை பஸ்நிலையம், முருகன்குறிச்சி, வண்ணார்பேட்டை, நெல்லை சந்திப்பு, நெல்லையப்பர் கோவில் சன்னதி வழியாக டவுன் கோடீஸ்வரன்நகரில் உள்ள லிட்டில் பிளவர் பள்ளியை சென்றடைந்தது.

மீட்பு பணி 

பேரணியில் சென்றவர்கள், இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் பணியான ரத்ததானம், உடல்தானம், மீட்பு பணி, முதலுதவி போன்றவை குறித்து மக்களிடம் எடுத்துக் கூறினர்.

இந்த பேரணியில் சங்க துணைத்தலைவர் மரியசூசை, பொருளாளர் டாக்டர் பிரேமசந்திரன், ராமநாபுரம் மாவட்ட செயலாளர் ராக்லேண்ட் மதுரம், நீலகிரி மாவட்ட செயலாளர் மோரீஸ் சாந்தாகுரூஸ், தூத்துக்குடி மாவட்ட பொருளாளர் வன்னியராஜா, சேரன்மாதேவி மாவட்ட கல்வி அலுவலர் சுடலை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story