சேலத்தில் வேளாண் கண்காட்சி தூத்துக்குடி விவசாயிகள் பங்கேற்க கலெக்டர் வேண்டுகோள்


சேலத்தில் வேளாண் கண்காட்சி தூத்துக்குடி விவசாயிகள் பங்கேற்க கலெக்டர் வேண்டுகோள்
x
தினத்தந்தி 9 Feb 2020 3:30 AM IST (Updated: 8 Feb 2020 9:18 PM IST)
t-max-icont-min-icon

இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் 11–ந்தேதி வரை பிரமாண்டமான வேளாண் கருத்து கண்காட்சி நடக்க உள்ளது.

தூத்துக்குடி, 

சேலத்தில் நடைபெறும் வேளாண் கண்காட்சியில் தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என்று மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:–

வேளாண் கண்காட்சி 

சேலம் மாவட்டம் தலைவாசலில் உள்ள கால்நடை பராமரிப்பு பண்ணையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் 11–ந்தேதி வரை பிரமாண்டமான வேளாண் கருத்து கண்காட்சி நடக்க உள்ளது. இதனை தமிழக முதல்–அமைச்சர் திறந்து வைத்து பார்வையிட உள்ளார். இந்த கண்காட்சியில் பெரிய அளவிலான 50 அரங்குகள் இடம்பெற உள்ளன.

அந்த அரங்குகளில் பாரம்பரிய பயிர் ரகங்கள், புதிய பயிர் ரகங்கள், மண் மேலாண்மை, உர மேலாண்மை, ஒருங்கிணைந்த பூச்சி நோய் நிர்வாகம், களை மேலாண்மை, நீர் மேலாண்மை, அறுவடை, பின் அறுவடை தொழில்நுட்பங்கள், வணிக வாய்ப்புகள், மதிப்பு கூட்டுதல், புதிய வேளாண் தொழில்நுட்பங்கள், எந்திரமயமாக்கல், கால்நடை பராமரிப்பு, வேளாண் துறையின் பல்வேறு திட்டங்கள் இடம்பெற உள்ளன.

தூத்துக்குடி விவசாயிகள் 

இந்த கண்காட்சியில், விதைகள், இடுபொருட்கள் மற்றும் வேளாண் எந்திரங்களின் செயல்பாடுகளை விளக்கும் வேளாண்மை, கால்நடை அறிவியல் சம்பந்தப்பட்ட பல்வேறு தனியார் நிறுவனங்களின் அரங்குகளும் இடம் பெறுகின்றன. மேலும் வேளாண்மை மற்றும் கால்நடை அறிவியல் குறித்த கருத்தரங்குகளும், செயல் விளக்கங்களும் நடைபெறுகின்றன. எனவே தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள், சேலத்தில் நடக்கும் வேளாண் கண்காட்சியில் கலந்துகொண்டு பயன்பெறலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story