குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்பதால் காங்கிரஸ் கட்சியை மக்கள் வெறுத்துவிட்டனர் ஷோபா எம்.பி. பேட்டி


குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்பதால்   காங்கிரஸ் கட்சியை மக்கள் வெறுத்துவிட்டனர்   ஷோபா எம்.பி. பேட்டி
x
தினத்தந்தி 9 Feb 2020 4:00 AM IST (Updated: 8 Feb 2020 11:18 PM IST)
t-max-icont-min-icon

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்பதால் காங்கிரஸ் கட்சியை மக்கள் வெறுத்துவிட்டனர் என்று ஷோபா எம்.பி. தெரிவித்துள்ளார்.

சிக்கமகளூரு,

சிக்கமகளூரு நகரசபை வளாகத்தில் உள்ள எம்.பி. அலுவலகத்தில் சிக்கமகளூரு-உடுப்பி தொகுதி எம்.பி. ஷோபா நிருபர்களுக்கு பேட்டி அளித்தாா். அப்போது அவர் கூறியதாவது:-

மக்கள் வெறுத்துவிட்டனர்

இந்தியாவில் காங்கிரஸ் கட்சி மெல்ல, மெல்ல அழிந்து வருகிறது. குடியுாிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்பதால் காங்கிரஸ் கட்சியை மக்கள் வெறுத்துவிட்டனர். காங்கிரஸ் கட்சியின் சவப்பெட்டிக்கு கடைசி ஆணி அடிக்கப்பட்டு விட்டது. டெல்லி சட்டசபை தேர்தலில் பா.ஜனதா கட்டாயம் வெற்றி பெறும். குடியுரிமை திருத்த சட்டத்தை பற்றி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பொய்யான தகவல்களை கூறி மக்களை திசை திருப்ப முயற்சி செய்கிறது.

பா.ஜனதாவுக்கு எதிராக போராட்டம் நடத்த காங்கிரஸ் கட்சி பணம், உணவு கொடுத்து ஆட்கள் சேர்க்கிறார்கள். மக்கள் மத்தியில் பிரபலம் ஆக வேண்டும் என்ற நோக்கத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பா.ஜனதாவை தாக்கி பேசுகிறார்கள்.

தகவல் தெரிவிக்க வேண்டும்

கொரோனா வைரசுக்கு கேரளாவை சேர்ந்த 3 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் கேரளாவில் இருந்து கர்நாடகத்துக்கு சுற்றுலா வருபவர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடத்த வேண்டும். கேரள சுற்றுலா பயணிகள் தங்கள் பயண விவரங்கள், தங்கும் இடங்கள் பற்றி தகவல் தெரிவிக்க வேண்டும். கர்நாடகத்துக்கு கேரள பயணிகள் யாரும் சுற்றுலாவுக்கு வர வேண்டாம் என்று கூறவில்லை. சுற்றுலா வருபவர்கள் தங்களின் விவரங்களையும், மருத்துவ அறிக்கையையும் தாக்கல் செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story