மாவட்ட செய்திகள்

ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள் அருவியில் குளித்தும், பரிசலில் சென்றும் மகிழ்ந்தனர் + "||" + Tourists gathered at the Oakenakkal enjoy a bath in the waterfall and a gift

ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள் அருவியில் குளித்தும், பரிசலில் சென்றும் மகிழ்ந்தனர்

ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள் அருவியில் குளித்தும், பரிசலில் சென்றும் மகிழ்ந்தனர்
விடுமுறை தினமான நேற்று ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் அருவியில் குளித்தும், பரிசலில் சென்றும் மகிழ்ந்தனர்.
பென்னாகரம்,

தமிழகத்தின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றான தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு கர்நாடகம், ஆந்திரா, கேரளா போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் விடுமுறை நாட்களில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். அவர்கள் எண்ணெய் மசாஜ் செய்து கொண்டு அருவியில் குளித்தும், பரிசலில் நண்பர்கள், குடும்பத்துடன் சென்றும் மகிழ்வார்கள்.இந்த நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை காரணமாக ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்திருந்தனர். சுற்றுலா பயணிகள் குவிந்ததால் ஒகேனக்கல் களைகட்டியது.


பரிசல் சவாரி

மேலும் சுற்றுலா பயணிகள் எண்ணெய் மசாஜ் செய்து கொண்டு, மெயின் அருவி மற்றும் காவிரி கரையோர பகுதிகளில் குளித்து மகிழ்ந்தனர். அவர்களில் சிலர் பாதுகாப்பு உடை அணிந்து உற்சாகமாக பரிசல் சவாரி செய்து காவிரியின் இயற்கை அழகை கண்டு ரசித்தனர்.


தொடர்புடைய செய்திகள்

1. திருச்சியில் தவித்த 372 பயணிகள் தனி விமானங்களில் மலேசியா அனுப்பி வைப்பு
திருச்சி விமான நிலையத்தில் தவித்த 372 பயணிகள் தனி விமானங்களில் மலேசியா அனுப்பி வைக்கப்பட்டனர்.
2. கொடைக்கானலில் தங்கும் விடுதிகள் மூடல்: சாலையோரத்தில் தஞ்சம் அடைந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்
கொடைக்கானலில் தங்கும் விடுதிகள் மூடப்பட்டதால், வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் சாலையோரத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
3. ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள் பரிசலில் சென்று மகிழ்ந்தனர்
ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள் பரிசலில் சென்று மகிழ்ந்தனர்.
4. ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தது
ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தது.
5. காரைக்கால்-இலங்கைக்கு விரைவில் பயணிகள் கப்பல் மத்திய இணை மந்திரி தகவல்
காரைக்கால்-இலங்கை இடையே விரைவில் பயணிகள் கப்பல் போக்கு வரத்து தொடங்கப்படும் என்று மத்திய இணை மந்திரி மன்சுக் மாண்டவியா தெரிவித்தார்.