குடும்பத் தகராறில் ‘ஹேர்டை’ குடித்து இளம்பெண் தற்கொலை
சென்னை கே.கே.நகர், குடும்பத் தகராறில் ஹேர்டை குடித்து இளம்பெண் தற்கொலை செய்துகொண்டார்.
சென்னை,
சென்னை கே.கே.நகர் அன்னை சத்யா நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார்(வயது 29). ஆட்டோ டிரைவர். இவரது மனைவி பவித்ரா(23). இவர்கள் இருவரும் காதலித்து கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 3 மாதத்தில் பெண் குழந்தை உள்ளது.
திருமணம் ஆன நாள் முதல் கணவன்-மனைவி இருவருக்கும் இடையில் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. கடந்த 7-ந்தேதி இருவருக்கும் இடையில் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த பவித்ரா வீட்டில் இருந்த தலைக்கு அடிக்கும் ‘ஹேர்-டை’யை குடித்து மயங்கி கிடந்தார்.
இதைக்கண்ட அவரது உறவினர்கள் பவித்ராவை மீட்டு ராய்ப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக அவர் உயிரிழந்தார். இது குறித்து எம்.ஜி.ஆர். நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story