வயல்களில் வேளாண்மை துணை இயக்குனர் ஆய்வு


வயல்களில் வேளாண்மை துணை இயக்குனர் ஆய்வு
x
தினத்தந்தி 10 Feb 2020 4:00 AM IST (Updated: 10 Feb 2020 1:45 AM IST)
t-max-icont-min-icon

அரியலூர் வட்டாரத்தில் மக்காச்சோளம், நெல் மற்றும் பருத்தி வயல்களில் நடைபெற்ற பயிர் அறுவடை பரிசோதனைகளை வேளாண்மை துணை இயக்குனர் பழனிசாமி நேரில் ஆய்வு செய்தார்.

அரியலூர்,

அரியலூர் வட்டாரத்தில் மக்காச்சோளம், நெல் மற்றும் பருத்தி வயல்களில் நடைபெற்ற பயிர் அறுவடை பரிசோதனைகளை வேளாண்மை துணை இயக்குனர் பழனிசாமி நேரில் ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறுகையில், பரிசோதனை அறுவடையானது 5 சதுர மீட்டர் நீள அகலப்பரப்பில் புள்ளியில் துறையின் மூலம் பெறப்பட்ட எதேச்சை எண்கள் கொண்டு தேர்வு செய்யப்பட்டு பின்பு அறுவடை செய்யப்படும். மாநிலம் முழுவதும் நடைபெறும் அறுவடை மகசூல் விபரங்களை சேகரிக்கப்பட்டு மாநில உணவு தானிய உற்பத்தி கணக்கிடப்படும் என்றார். இந்த ஆய்வின் போது வேளாண்மை உதவி இயக்குனர்கள் சுரே‌‌ஷ்குமார், சவிதா, துணை வேளாண்மை அலுவலர் பீட்டர் அந்தோணிராஜ், உதவி வேளாண்மை அலுவலர் ஸ்ரீதேவி மற்றும் விவசாயிகள் உடனிருந்தனர்.

Next Story