செய்யூர் அருகே கார்கள் நேருக்கு நேர் மோதல்; 2 பேர் பலி
செய்யூர் அருகே கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 2 பேர் பலியானார்கள்.
மதுராந்தகம்,
விழுப்புரம் மாவட்டம் ஆலப்பாக்கத்தை சேர்ந்தவர் கந்தசாமி (வயது 60). இவரது மனைவி ராதாபாய்( 55). இவர்களுக்கு சென்னையில் சொந்தமாக வீடு உள்ளது. இவர்கள் தங்கள் உறவினர்கள் எழில் குமார் (32), சசிகுமார் (34), ராஜஸ்ரீ (19) ஆகியோருடன் சென்னை வந்து விட்டு நேற்று முன்தினம் காரில் சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு சென்று கொண்டிருந்தனர்.
சென்னை கிழக்கு கடற்கரை சாலை செய்யூரை அடுத்த வேம்பனூர் பகுதியில் கார் சென்றபோது எதிரே புதுச்சேரியில் இருந்து சென்னை நோக்கி வந்த கார் நேருக்கு நேர் மோதியது.
அந்த காரை சென்னை கீழ்ப்பாக்கத்தை சேர்ந்த சீனிவாசன் (45) ஓட்டி வந்தார். இதில் கந்தசாமி, ராதாபாய், எழில்குமார், சசிகுமார், ராஜஸ்ரீ ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக புதுச்சேரியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராதாபாய், எழில்குமார் ஆகியோர் பரிதாபமாக இறந்தனர். கந்தசாமி, சசிகுமார், ராஜஸ்ரீ ஆகியோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது குறித்து தகவல் அறிந்த சூனாம்பேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் தரனேஸ்வரி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவர்களது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மற்றொரு காரை ஓட்டி வந்த சீனிவாசனை கைது செய்து விசாரித்து வருகின்றனர். விபத்தில் பலியான எழில் குமார் விழுப்புரம் மாவட்டம் ஒலக்கூரில் விளையாட்டு ஆசிரியராக பணிபுரிந்து வந்தார்.

Related Tags :
Next Story