கலவை அருகே உதவியாளரிடம் தவறாக நடக்க முயன்ற சத்துணவு அமைப்பாளர் கைது
கலவை அருகே உதவியாளரிடம் தவறாக நடக்க முயன்றதாக சத்துணவு அமைப்பாளர் கைது செய்யப்பட்டார்.
ராணிப்பேட்டை,
கலவை அருகே அரும்பாக்கம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக வேலை பார்ப்பவர் குமார் (வயது 39), இவர் அதே பள்ளியில் சமையல் உதவியாளராக உள்ள பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அவர் உயர் அதிகாரிகளிடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தெரிகிறது. இதைத்தொடர்ந்து அவர் கலவை போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர்கள் சரவணமூர்த்தி, ராஜேந்திரன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து குமாரை கைது செய்தனர்.
இதற்கிடையில் சத்துணவு மையத்தில் பணியில் இருந்தபோது சமையல் உதவியாளரின் மாமனார் தன்னை தாக்கியதாக குமார் போலீசில் புகார் கொடுத்துள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story