மே 21-ந் தேதி மனுநூல் எரிப்பு போராட்டம் கோவை சாதி ஒழிப்பு மாநாட்டில் தீர்மானம்


மே 21-ந் தேதி மனுநூல் எரிப்பு போராட்டம் கோவை சாதி ஒழிப்பு மாநாட்டில் தீர்மானம்
x
தினத்தந்தி 10 Feb 2020 4:45 AM IST (Updated: 10 Feb 2020 4:49 AM IST)
t-max-icont-min-icon

மனு நூல் எரிப்பு போராட்டம் மே மாதம் 21-ந் தேதி தமிழகம் முழுவதும் நடத்தப்படும் என்று கோவையில் நடைபெற்ற சாதி ஒழிப்பு மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கோவை,

கோவையில் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் நீலச்சட்டை பேரணி மற்றும் சாதி ஒழிப்பு மாநாடு நடைபெற்றது. பேரணி கோவை அவினாசி ரோடுஅண்ணா சிலை அருகில் தொடங்கி பாலசுந்தரம் ரோடு வழியாக பெண்கள் பாலிடெக்னிக் கல்லூரி அருகே நிறைவு பெற்றது. அங்கு நடைபெற்ற மாநாட்டிற்கு தந்தை பெரியார் திராவிடர்கழக பொதுச் செயலாளர் ராமகிருட்டிணன் தலைமை தாங்கினார்.

திராவிடர் விடுதலை கழக தலைவர் கொளத்தூர் மணி, தமிழக வாழ்வுரிமைகட்சி தலைவர் வேல்முருகன், மனிதநேய மக்கள்கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, எஸ்.டி.பி.ஐ. கட்சி தெகலான் பாகவி, தனியரசுஎம்.எல்.ஏ., பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பொழிலன், ஆனைமுத்து, திருமுருகன்காந்தி, தமிழ்புலிகள் கட்சி நாகை திருவள்ளுவன், ஆதித்தமிழர் பேரவை அதியமான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த கூட்டத்தில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி பேசும் போது கூறியதாவது:-

அம்பேத்கருக்கும்,பெரியாருக்கும்கொள்கை அளவிலான நெருக்கம் இருந்தது. காங்கிரசில்இருந்துகொண்டேசாதியை ஒழிக்கதந்தை பெரியார்போராடினார். அப்போதேதந்தை பெரியார்கூறினார் சாதியை ஒழிக்கவில்லை என்றால் பார்ப்பன ஆட்சி நடைபெறும் என்றார். அதுதான் இப்போது நடைபெறுகிறது.

சாதி சமூகத்திற்குவிரோதம், அதை ஒழிக்கஅரசு தான்மேடை போட்டுக்கொடுக்க வேண்டும். ஆனால், இங்கு நடக்கும் பேரணிக்கு அனுமதி வாங்க போராடவேண்டியிருந்தது. எந்த அடக்கு முறைக்கும் நாங்கள்அடங்கி போகமாட்டோம். நாம் ஆயிரம் பேர் செத்தாலும்,சாதி சாகடிக்கப்படவேண்டும். எங்கள்உயிர் போவதுதிண்ணம், அது நல்லகாரியத்திற்கு போகட்டும். எங்களுடன் விளையாடுவது நெருப்புடன்விளையாடுவதற்குசமம்.போலீசார்அனைவருக்கும்பொதுவாக இருக்க வேண்டும். இன்னும் ஓர்ஆண்டு காலம்தான் ஆட்சி உள்ளது. அப்போது மாற்றம் வரும்.அனைத்து சாதியினரும்அர்ச்சகராகும்வரைஇந்த போராட்டம்தொடரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதைத்தொடர்ந்து,விடுதலை சிறுத்தைகள்கட்சி தலைவர் திருமாவளவன் எம்.பி. பேசும் போது கூறியதாவது:-

பெரியாரியஉணர்வாளர்கள் சார்பில் திருச்சியில் கருஞ்சட்டை பேரணி நடைபெற்றது. இப்போது நீலசட்டை பேரணி, அடுத்தது செஞ்சட்டை பேரணியும் நடைபெறும். நமக்கு நீல நிறத்தை அம்பேத்கர் தேர்வு செய்தார். சங்பரிவார் அமைப்பினர் அந்த நீலநிறத்தை பயன்படுத்த மாட்டார்கள். அவர்கள் சாதிவெறி பிடித்தவர்கள்.அதேசமயம், கிருஷ்ணனின் நிறம் நீலம். சாதிமறுப்பு திருமணங்கள்மூலம் சாதியை ஒழிக்க முடியும். சாதி ஒழிப்பு கவுதமபுத்தர் காலத்திலிருந்து உருவானது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த மாநாட்டில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சாதிக்கு அடித்தளமாக மனு தர்மம் எனும் மனுநூல் உள்ளது. எனவே அம்பேத்கர், பெரியார் வழியில் மனு நூல் எரிப்பு போராட்டம் வருகிற மே மாதம் 21-ந்தேதி தமிழகம் முழுவதும் நடைபெறும்.

நடிகர்ரஜினிகாந்த்சமீபகாலமாகதமிழகத்தின்உரிமைகளுக்கு போராடுகிறமக்களின்போராட்டங்களையும்,போராடுபவர்களையும்இழிவுப்படுத்திபேசுவதை இந்த மாநாடு கண்டிக்கிறது. கோவைமாநகராட்சி குடிநீர்வினியோகஉரிமையை வெளிநாட்டு நிறுவனமானசூயஸ்நிறுவனத்திற்கு வழங்கியதை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட 33 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்த மாநாட்டில் கனிகாசெல்வன்-இலக்கியாமற்றும் பிரசாந்த்- ரம்யா ஆகிய ஜோடிகளுக்கு திராவிடர் கழக தலைவர்வீரமணிசுயமரியாதை திருமணம்நடத்தி வைத்தார். 

Next Story