அன்புச்செழியன் வீட்டில் நடந்த வருமானவரி சோதனைக்கும், பா.ஜனதாவுக்கும் தொடர்பு இல்லை - எச்.ராஜா பேட்டி


அன்புச்செழியன் வீட்டில் நடந்த வருமானவரி சோதனைக்கும், பா.ஜனதாவுக்கும் தொடர்பு இல்லை - எச்.ராஜா பேட்டி
x
தினத்தந்தி 10 Feb 2020 4:00 AM IST (Updated: 10 Feb 2020 5:23 AM IST)
t-max-icont-min-icon

சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் வீட்டில் நடந்த வருமான வரித்துறை சோதனைக்கும், பா.ஜனதாவுக்கும் தொடர்பு இல்லை என பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா கூறினார். மதுரையில் பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா நிருபர்களுக்கு பேட்டி அளித்து கூறியதாவது:-

மதுரை, 

நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பு சரத்குமாரின் அரவிந்தன் படப்பிடிப்பின்போது விபத்து ஏற்பட்டது. அதன் பிறகு அங்கு சூட்டிங் நடத்தக்கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அங்கு சூட்டிங் நடந்ததால் பா.ஜனதா போராட்டம் நடத்தியதே தவிர, இது நடிகர் விஜய்க்கு எதிரான போராட்டம் அல்ல. சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் வீட்டில் நடந்த வருமானவரித்துறை சோதனைக்கும், பா.ஜனதாவுக்கும் தொடர்பு இல்லை. சட்டம் தன் கடமையை செய்கிறது. டெல்லி சட்டப்பேரவை தேர்தல் தொடர்பாக வெளியானது கருத்து கணிப்பு அல்ல. அது கருத்து திணிப்பு.

தமிழகத்தில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் இந்துக்களுக்கு எதிராக மத ரீதியிலான தாக்குதல்களை கட்டவிழ்த்து விடுகின்றன. நாடாளுமன்றத்தில் மக்கள் பிரதிநிதி என்கிற வகையில் ஒரு மசோதாவை ஆதரிப்பதோ, எதிர்ப்பதோ அவரவரது உரிமை ஆகும். ஆனால் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு ஆதரவு தெரிவித்த ஒரே காரணத்திற்காக தேனி தொகுதி எம்.பி. ரவீந்திரநாத் குமார் மீது கம்பம் பகுதியில் இஸ்லாமியர்கள் கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதேபோல் நாங்கள் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக வாக்களித்த 38 எம்.எல்.ஏ.க்கள் மீது எதிர் தாக்குதல் நடத்தினால் தி.மு.க. கூட்டணி கட்சிகள் தாங்குமா?.

தஞ்சை கோவிலில் தமிழில் குடமுழுக்கு நடத்த வேண்டும் என்று போராடிய தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள், மசூதியில் அரபு மொழியில் நடத்தப்படும் நமாசை, தமிழில் நடத்தவில்லை என ஏன் போராடுவதில்லை. தஞ்சை பெருவுடையார் கோவிலில் தமிழில் குடமுழுக்கு நடத்த வேண்டும் என்று போராட்டம் நடத்த டேவிட் மணியரசன், சீமான், ஜெயினுல்லாப்தீன் ஆகியோருக்கு என்ன அருகதை உள்ளது. சிவ வழிபாட்டை கொச்சைப்படுத்திய சீமான், தஞ்சை கோவிலுக்கு சென்றது யாரை ஏமாற்றுவதற்காக என்பது தெரியவில்லை. தஞ்சை பெரிய கோவிலில் வழிபாடு செய்த சீமான், சீமானுடன் சென்ற ஹுமாயூன் உள்ளிட்ட எண்ணற்ற இஸ்லாமியர்கள் செருப்பு காலோடு கோவிலுக்குள் புகுந்துள்ளனர். ஆனால் கோவில் ஊழியர்கள் நிர்ப்பந்தம் காரணமாக பின்னர் காலணியை கழற்றிவிட்டு சென்றுள்ளனர். இந்து அல்லாத பிற மதத்தவர்களை கோவிலுக்குள் நுழைய அறநிலையத்துறை அதிகாரி எப்படி அனுமதித்தார் என்று தெரியவில்லை. அவரை உடனடியாக சஸ்பெண்டு செய்ய வேண்டும். இல்லாவிட்டால் பா.ஜனதா சார்பில் போராட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story