பிலிப்பைன்சில் இருந்து வந்த புனே வாலிபருக்கு கொரோனா வைரஸ்? ஆஸ்பத்திரியில் தனிமை வார்டில் அனுமதி
பிலிப்பைன்சில் இருந்து வந்த புனே வாலிபருக்கு கொரோனா அறிகுறி சந்தேகத்தின் பேரில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவர் தனிமை வார்டில் வைக்கப்பட்டு உள்ளார்.
புனே,
சீனாவில் பெருமளவு உயிர்பலி ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் நமது நாட்டில் பரவி விடாமல் இருப்பதற்காக தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன்படி சீனா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு விமான நிலையத்தில் தீவிர பரிசோதனை செய்யப்படுகிறது.
கடந்த மாதம் 18-ந் தேதி முதல் தற்போது வரை வெளிநாடுகளில் இருந்து மும்பைக்கு வந்த பயணிகள் 18 ஆயிரத்த 84 பேருக்கு விமான நிலையததில் பரிசோதனை செய்யப்பட்டது.
இவர்களில் 30 பேருக்கு கொரோனா அறிகுறி இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் அவர்கள் மும்பை, புனே, அகமதுநகர் உள்ளிட்ட இடங்களில் உள்ள ஆஸ்பத்திரிகளில் தனிமை வார்டுகளில் அனுமதிக்கப்பட்டனர். ரத்த பரிசோதனையில் அவர்கள் கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்படவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டது.
இந்த நிலையில், புனேயை சேர்ந்த 26 வயது வாலிபர் ஒருவர் பிலிப்பைன்சில் இருந்து ஹாங்காங், சிங்கப்பூர் வழியாக புனே வந்தார்.
விமான நிலையத்தில் சோர்வுடன் காணப்பட்டார். உடல் முழுவதும் வலிப்பதாகவும் கூறினார். இதையடுத்து அவருக்கு கொரோனா அறிகுறி உள்ளதா என்பதை கண்டறிய, புனேயில் உள்ள நாயுடு மாநகராட்சி ஆஸ்பத்திரியில் தனிமை வார்டில் அனுமதிக்கப்பட்டார்.
அவரது ரத்த மாதிரி பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

Related Tags :
Next Story