மாவட்ட செய்திகள்

தூத்துக்குடியில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை - உதவி கலெக்டர் விசாரணை + "||" + Youth suicide in Thoothukudi suicide - Assistant Collector's Investigation

தூத்துக்குடியில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை - உதவி கலெக்டர் விசாரணை

தூத்துக்குடியில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை - உதவி கலெக்டர் விசாரணை
தூத்துக்குடியில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.
தூத்துக்குடி, 

தூத்துக்குடி தெர்மல்நகர் முத்துநகரை சேர்ந்தவர் பால்சாமி (வயது 30). இவருடைய மனைவி செல்லம்மாள் (27). இவர்களுக்கு கடந்த 2017-ம் ஆண்டு திருமணம் நடந்தது. ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் குழந்தைக்கு மொட்டை போடுவதற்காக பருத்திகுளத்தில் உள்ள கோவிலுக்கு செல்ல முடிவு செய்யப்பட்டது. ஆனால் செல்லம்மாள் கோவிலுக்கு வரவில்லை என்று கூறிவிட்டாராம். இதனால் பால்சாமி தனது குழந்தை மற்றும் தனது குடும்பத்தை சேர்ந்தவர்களுடன் கோவிலுக்கு சென்று விட்டார். இதில் செல்லம்மாள் மனமுடைந்த நிலையில் காணப்பட்டார். வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் செல்லம்மாள் திடீரென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து உடனடியாக தெர்மல்நகர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தெர்மல் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். திருமணமாகி 3 ஆண்டுகளே ஆவதால் இந்த சம்பவம் குறித்து தூத்துக்குடி உதவி கலெக்டர் சிம்ரான்ஜீத்சிங் கலோன் விசாரணை நடத்தி வருகிறார்.

தொடர்புடைய செய்திகள்

1. டிக்டாக் மோகம்; கொரோனா பாதித்த நிலையிலும் வீடியோ வெளியிட்ட இளம்பெண்
சென்னையில் கொரோனா பாதித்த நிலையிலும் இளம்பெண் ஒருவர் டிக்டாக் வீடியோ வெளியிட்டது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
2. தூத்துக்குடியில் ஏழைகள், சாலையோரம் வசிப்பவர்களுக்கு உணவு வழங்க ஏற்பாடு - மாநகராட்சி ஆணையாளர் தகவல்
தூத்துக்குடியில் ஏழைகள், சாலையோரம் வசிப்பவர்களுக்கு உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாக மாநகராட்சி ஆணையாளர் ஜெயசீலன் தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:-
3. தூத்துக்குடி அருகே, என்ஜினீயர் வீட்டில் 39 பவுன் நகை திருட்டு
தூத்துக்குடி அருகே என்ஜினீயர் வீட்டில் 39 பவுன் நகைகளை மர்மநபர் திருடி சென்று உள்ளார்.
4. தூத்துக்குடியில் 48 பேருக்கு ரூ.6¼ லட்சம் நலத்திட்ட உதவிகள் - கலெக்டர் சந்தீப் நந்தூரி வழங்கினார்
தூத்துக்குடியில் 48 பேருக்கு ரூ.6¼ லட்சம் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் சந்தீப் நந்தூரி வழங்கினார்.
5. தூத்துக்குடி விமான நிலையத்தில் விபத்தில் காயம் அடைந்தவர்களை கண்டறிந்து மீட்கும் நவீன கருவி - நிலைய இயக்குனர் சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்
தூத்துக்குடி விமான நிலையத்தில் ரூ.48½ லட்சம் செலவில் விபத்தில் காயம் அடைந்தவர்களை கண்டறிந்து மீட்கும் நவீன கருவிகளை விமான நிலைய இயக்குனர் சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.