கால்நடை பராமரிப்பு விழிப்புணர்வு முகாம்


கால்நடை பராமரிப்பு விழிப்புணர்வு முகாம்
x
தினத்தந்தி 11 Feb 2020 3:30 AM IST (Updated: 10 Feb 2020 11:51 PM IST)
t-max-icont-min-icon

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த முதுகரை கிராமத்தில் கால்நடை பராமரிப்பு மக்கள் தொடர்பு மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

மதுராந்தகம்,

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம், இந்திய வானிலை ஆய்வு மையம் மற்றும் தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறை ஆகியவை இணைந்து நடத்திய முகாமில், அப்பகுதியை சேர்ந்த சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தங்களது கால்நடைகளை அழைத்து வந்து மருத்துவ பரிசோதனை செய்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் கால்நடைத்துறை மண்டல இயக்குனர் எஸ்.கலா, சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரி பேராசிரியர் தங்க.தமிழ்வாணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பின்னர் முதுகரை திறந்தவெளி மைதானத்தில் நடைபெற்ற கருத்தரங்கில், இந்திய வானிலை ஆராய்ச்சி மைய தலைவர் புதுடில்லி கே.கே .சிங் பங்கேற்றார்.

இதில், மேல்மருவத்தூர் கால்நடை மருத்துவ பேராசிரியர் மு.முருகன், காட்டுப்பாக்கம் கால்நடை மருத்துவ பேராசிரியர் பி.ஆர்.நிஷா, மதுராந்தகம் கால்நடைஉதவி இயக்குனர் இரா.அழகுவேல ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.

Next Story