ஸ்கூட்டரில் சென்ற பெண்ணிடம் 2¼ பவுன் சங்கிலி பறிப்பு மோட்டார் சைக்கிளில் வந்த ஆசாமிக்கு வலைவீச்சு
தஞ்சை அருகே ஸ்கூட்டரில் சென்ற பெண்ணிடம் 2¼ பவுன் சங்கிலியை மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம ஆசாமி பறித்து சென்றார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
கள்ளப்பெரம்பூர்,
தஞ்சை அருகே உள்ள ஈச்சங்கோட்டை வடக்கு தெருவை சேர்ந்தவர் முருகேசன். இவருடைய மனைவி சத்தியா(வயது29). முருகேசன் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று சத்தியா ஈச்சங்கோட்டையில் இருந்து அவருடைய ஸ்கூட்டரில் உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தஞ்சை நோக்கி வந்து கொண்டிருந்தார். சூரியம்பட்டியை அடுத்த வி.கே. நகர் பகுதியில் சத்தியா ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்த போது பின்புறம் மோட்டார் சைக்கிளில் வந்த 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் திடீரென சத்தியா கழுத்தில் அணிந்திருந்த 2¼ பவுன் சங்கிலியை பறித்து கொண்டு மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த சத்தியா சத்தம் போட்டார்.
வலைவீச்சு
உடனே அங்கு வந்த அக்கம்பக்கத்தினர் சங்கிலியை பறித்து சென்ற ஆசாமியை மோட்டார் சைக்கிளில் துரத்தி சென்றனர். ஆனால் சங்கிலியை பறித்து சென்ற ஆசாமி அந்த சாலையில் சென்று கொண்டிருந்த லாரியை மோட்டார் சைக்கிளில் முந்தி சென்று தப்பி விட்டார். இது குறித்து சத்தியா வல்லம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சங்கிலியை பறித்து சென்ற ஆசாமியை தேடி வருகிறார்கள். ஸ்கூட்டரில் சென்ற பெண்ணிடம் மர்ம ஆசாமி சங்கிலியை பறித்து சென்ற சம்பவம் வல்லம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Tags :
Next Story