இளம்பெண்ணுக்கு ஆபாச வீடியோ அனுப்பிய மருந்து கடை உரிமையாளருக்கு அடி-உதை போலீசார் விசாரணை


இளம்பெண்ணுக்கு ஆபாச வீடியோ அனுப்பிய மருந்து கடை  உரிமையாளருக்கு அடி-உதை   போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 11 Feb 2020 5:09 AM IST (Updated: 11 Feb 2020 5:09 AM IST)
t-max-icont-min-icon

இளம்பெண்ணுக்கு ஆபாச வீடியோ அனுப்பிய மருந்து கடை உரிமையாளருக்கு அடி-உதை விழுந்தது. மேலும் இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சிக்கமகளூரு, 

சிக்கமகளூரு மாவட்டம் மல்லந்தூர் சாலையில் மருந்து கடை வைத்து நடத்தி வருபவர் சித்தார்த்(வயது50). இவரது கடையில் சிக்கமகளூரு டவுனில் இருந்து ஒரு இளம் பெண் வேலை பார்த்தார். அந்த இளம் பெண்ணுக்கு சித்தார்த் தனது செல்போனில் இருந்து ஆபாச வீடியோ அனுப்பியுள்ளார்.

இதைப்பார்த்த அந்த இளம் பெண் அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து அவர் தனது உறவினர்களிடம் தெரிவித்து உள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் அந்த மருந்து கடைக்கு சென்றனர்.

அடி-உதை

கடையில் இருந்த சித்தார்த்தை அவர்கள் பிடித்து அடித்து, உதைத்தனர். மேலும் மருந்து கடையையும் சூறையாடினார்கள். இதை கேள்விப்பட்ட பசவனஹள்ளி போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் இளம் பெண்ணின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

மேலும் அவர்கள் மருந்து கடை உரிமையாளர் சித்தார்த் மீது போலீசாரிடம் புகார் தெரிவித்தனர். இதை ெதாடர்ந்து அவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story