மக்கள் ஆசீர்வாதத்துடன் மீண்டும் ஆட்சிக்கு வருவோம் பட்னாவிஸ் பேச்சு


மக்கள் ஆசீர்வாதத்துடன் மீண்டும் ஆட்சிக்கு வருவோம்   பட்னாவிஸ் பேச்சு
x
தினத்தந்தி 11 Feb 2020 5:34 AM IST (Updated: 11 Feb 2020 5:34 AM IST)
t-max-icont-min-icon

மக்கள் ஆசீர்வாதத்துடன் மீண்டும் ஆட்சிக்கு வருவோம் என எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் கூறினார்.

மும்பை,

மராட்டியத்தில் சட்டசபை தேர்தலுக்கு பிந்தைய சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணியிடம் பாரதீய ஜனதா ஆட்சியை பறிகொடுத்தது. இதையடுத்து பாரதீய ஜனதா மராட்டிய சட்டசபையில் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்தது. அக்கட்சியை சேர்ந்த முன்னாள் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் எதிர்க்கட்சி தலைவராக உள்ளார். இந்தநிலையில், புனே மாவட்டத்தில் உள்ள ஆன்மிக தலமான அலாண்டி நகரில் நடந்த ஒரு கூட்டத்தில் தேவேந்திர பட்னாவிஸ் பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

அதிகாரத்தில் இருந்தாலும், எதிர்க்கட்சியாக இருந்தாலும் சரியான பாதையில் நடக்க வேண்டும். அவ்வாறு நடப்பதற்கு ஆசீர்வாதம் பெறுவதற்கு இங்கு வர வேண்டும். அந்த வகையில் நான் உங்கள் ஆசீர்வாதங்களை பெறுவதற்கு இங்கு வந்து இருக்கிறேன். மக்களின் ஆசீர்வாதத்துடன் நிச்சயம் மீண்டும் ஆட்சிக்கு வர முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

மராட்டிய சட்டசபை தேர்தல் பிரசாரத்தில், ‘நான் மீண்டும் வருவேன்' என்ற வார்த்தையை தேவேந்திர பட்னாவிஸ் பயன்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story