மாவட்ட செய்திகள்

818 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் + "||" + Free bicycle presented 818 students

818 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்

818 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்
செய்யாறில் 818 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் வழங்கினார்
செய்யாறு, 

செய்யாறு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா உதவி கலெக்டர் கே.விமலா தலைமையில் நடந்தது. தூசி கே.மோகன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். மாவட்ட கல்வி அலுவலர் (பொறுப்பு) பி.செல்வராஜ் வரவேற்றார். 

இதில் தமிழக இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 498 மாணவிகளுக்கு தமிழக அரசின் சார்பில் விலையில்லா சைக்கிள்களை வழங்கினார். இதில் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் அருகாவூர் அரங்கநாதன், அ.தி.மு.க நிர்வாகிகள் ஏ.அருணகிரி, பி.லோகநாதன், எம்.மகேந்திரன், தசரதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

முடிவில் பள்ளி தலைமை ஆசிரியை உமாமகேஸ்வரி நன்றி கூறினார். அதனை தொடர்ந்து செய்யாறு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த விழாவில் 320 மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டன.

தொடர்புடைய செய்திகள்

1. கீழ்பென்னாத்தூரில் 263 மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா
கீழ்பென்னாத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடந்தது.
2. அரசு பள்ளி மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்
நெல்லூர்பேட்டை அரசு பள்ளி மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கப்பட்டது.