மாவட்ட செய்திகள்

ரெயில் நிலையத்தில் 55 கிலோ கஞ்சா பறிமுதல் + "||" + 55 kg of ganja seized at railway station

ரெயில் நிலையத்தில் 55 கிலோ கஞ்சா பறிமுதல்

ரெயில் நிலையத்தில் 55 கிலோ கஞ்சா பறிமுதல்
அரக்கோணம் ரெயில் நிலையத்தில் 55 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
அரக்கோணம்,

அரக்கோணம் ரெயில் நிலையத்திற்கு நேற்று காலை கேரள மாநிலம் ஆலப்புழாவுக்கு செல்லும் தன்பாத் எக்ஸ்பிரஸ் ரெயில் வந்தது. அந்த ரெயிலில் குறிப்பிட்ட பெட்டியில் கஞ்சாவுடன் 2 பேர் வருவதாக ரெயில்வே பாதுகாப்பு படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து தயாராக இருந்த ரெயில்வே பாதுகாப்பு படையினர் உடனடியாக அந்த ரெயிலில் ஏறி சோதனை நடத்தினர். அப்போது 2 பேர் கஞ்சாவுடன் இருந்தனர். அவர்கள் 2 பேரையும் பிடித்து கீழே இறக்கினர்.

விசாரணையில் அவர்கள் மதுரையை சேர்ந்த தெய்வம் (வயது 33) மற்றும் தவமணி (55) என்பதும் கஞ்சா கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து அவர்களை 55 கிலோ கஞ்சாவுடன் வேலூர் மாவட்ட போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு ராமச்சந்திரனிடம் ஒப்படைத்தனர். இருவரையும் அவர் கைது செய்து 55 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

தொடர்புடைய செய்திகள்

1. வெவ்வேறு சம்பவம்: 171 கிலோ கஞ்சா பறிமுதல்; பெண்கள் உள்பட 8 பேர் கைது - கார்,ஆட்டோ, இருசக்கர வாகனமும் சிக்கின
உசிலம்பட்டி, திருமங்கலம் பகுதிகளில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் 171 கிலோ கஞ்சா சிக்கியது. இதுதொடர்பாக 2 பெண்கள் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர். கார் மற்றும் வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
2. பட்டிவீரன்பட்டி அருகே, தோட்டத்தில் பதுக்கிய 21 கிலோ கஞ்சா பறிமுதல்
பட்டிவீரன்பட்டி அருகேயுள்ள தோட்டத்தில் பதுக்கி வைத்திருந்த 21 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
3. மங்களூருவில் காரில் கடத்தி வந்த 10 கிலோ கஞ்சா பறிமுதல்; 4 பேர் கைது
மங்களூருவில், காரில் கடத்தி வந்த 10 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக கேரளாவை சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
4. வேலூர் அருகே, மினிலாரியில் கடத்திய 32 கிலோ கஞ்சா பறிமுதல் - அண்ணன் - தம்பி உள்பட 3 பேர் கைது
வேலூர் அருகே மினிலாரியில் கடத்திய 32 கிலோ கஞ்சாவை மாவட்ட போதைப்பொருள் நுண்ணறிவு மற்றும் புலனாய்வு பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக அண்ணன் - தம்பி உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
5. ஆத்தூரில் 294 கிலோ கஞ்சா பறிமுதல் வழக்கில், மேலும் 2 பேர் கைது; முக்கிய குற்றவாளிக்கு வலைவீச்சு
ஆத்தூரில் 294 கிலோ கஞ்சா பறிமுதல் செய்த வழக்கில் மேலும் 2 பேரை கைது செய்த போலீசார் முக்கிய குற்றவாளியை வலைவீசி தேடி வருகின்றனர்.