செங்கோட்டை அருகே 2 மோட்டார் சைக்கிள்கள் மீது மோதி குளத்துக்குள் பாய்ந்த கார் 7 பேர் படுகாயம்


செங்கோட்டை அருகே 2 மோட்டார் சைக்கிள்கள் மீது மோதி குளத்துக்குள் பாய்ந்த கார் 7 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 12 Feb 2020 4:00 AM IST (Updated: 11 Feb 2020 7:20 PM IST)
t-max-icont-min-icon

செங்கோட்டை அருகே 2 மோட்டார்சைக்கிள்கள் மீது மோதிய கார் குளத்துக்குள் பாய்ந்து கவிழ்ந்தது. இந்த விபத்தில் 7 பேர் காயம் அடைந்தனர்.

செங்கோட்டை, 

செங்கோட்டை அருகே 2 மோட்டார்சைக்கிள்கள் மீது மோதிய கார் குளத்துக்குள் பாய்ந்து கவிழ்ந்தது. இந்த விபத்தில் 7 பேர் காயம் அடைந்தனர்.

மோட்டார்சைக்கிள்கள் மீது மோதியது 

கேரள மாநிலம் கொல்லம் கருநாகப்பள்ளியில் இருந்து விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூருக்கு துணி மொத்த வியாபாரம் செய்வதற்காக பந்தனம்திட்டாவை சேர்ந்த அப்துல்ரகுமான் மகன் சலீம் (வயது 36), கொல்லத்தை சேர்ந்த சாகுல்அமீது மகன் பஷீர் (42), கருநாகப்பள்ளி இடத்தை சேர்ந்த அஜீஸ் மகன் சாபீத் (23), சபீக் (23) ஆகிய 4 பேர் ஒரு காரில் நேற்று செங்கோட்டையை நோக்கி வந்து கொண்டு இருந்தனர்.

செங்கோட்டை அருகே உள்ள கட்டளைகுடியிருப்பு அருகே மெயின் ரோட்டில் வந்தபோது கார் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த 2 மோட்டார்சைக்கிள்கள் மீது மோதியது.

7 பேர் படுகாயம் 

இதனால் மோட்டார்சைக்கிள்களில் வந்த செங்கோட்டை அருகே உள்ள லாலாகுடியிருப்பு ஊரைச் சேர்ந்த சங்கரமுத்து (54), காசிக்கண்ணு, தவனை ஊரைச் சேர்ந்த மாரியப்பன் மகன் முத்து (24) ஆகிய 3 பேரும் சாலையில் விழுந்து படுகாயம் அடைந்தனர்.

மேலும் மோட்டார்சைக்கிள்கள் மீது மோதிய கார் நிற்காமல் சாலையின் ஓரத்தில் உள்ள சாம்போடை குளத்தில் பாய்ந்து கவிழ்ந்தது. இதில் காரில் இருந்த 4 பேரும் படுகாயம் அடைந்தனர்.

அக்கம்பக்கத்தினர் கார் கதவு கண்ணாடிகளை உடைத்து காயம் அடைந்தவர்களை மீட்டனர். காயம் அடைந்தவர்கள் செங்கோட்டை மற்றும் தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து புளியரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தகவல் அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் வந்து, குளத்துக்குள் பாய்ந்த காரை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

Next Story