தூத்துக்குடியில் சுயவேலைவாய்ப்பு திட்டத்தில் விண்ணப்பித்தவர்களிடம் கலெக்டர் நேர்காணல்
தூத்துக்குடியில் சுயவேலைவாய்ப்பு திட்டத்தில் விண்ணப்பித்தவர்களிடம் கலெக்டர் சந்தீப் நந்தூரி நேர்காணல் நடத்தினார்.
தூத்துக்குடி,
தூத்துக்குடியில் சுயவேலைவாய்ப்பு திட்டத்தில் விண்ணப்பித்தவர்களிடம் கலெக்டர் சந்தீப் நந்தூரி நேர்காணல் நடத்தினார்.
நேர்காணல்
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பாரத பிரதமரின் சுய வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் மற்றும் நீட்ஸ் திட்டத்தில் விண்ணப்பித்தவர்களுடனான நேர்காணல் நிகழ்ச்சி நடந்தது.
மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி விண்ணப்பதாரர்களிடம் நேர்காணல் நடத்தினார். அப்போது நீட்ஸ் திட்டத்தின்கீழ் வரபெற்ற விண்ணப்பங்களின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களை நேர்காணல் செய்யப்பட்டு அதில் 4 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு கடன் உதவி வழங்க வங்கிகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. மேலும், பாரத பிரதமரின் சுய வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் மாவட்ட தொழில் மையம், கதர் கிராம தொழில் ஆணையம் மற்றும் கதர் கிராம தொழில் வாரியம் இணைந்து பல்வேறு தொழில்களை தொடங்க விண்ணப்பித்த 116 விண்ணப்பதாரர்கள் நேர்காணல் செய்யப்பட்டு விண்ணப்பங்களை வங்கிகளுக்கு பரிந்துரைக்கப்பட்டது.
கடன் உதவிகள்
முன்னதாக கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி பேசியதாவது;–
தூத்துக்குடி மாவட்டத்தில் தொழில் வளர்ச்சியினை விரைவுப்படுத்தவும், மேம்பாடு அடையவும், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன கொள்கை எளிமையாக்க தொழிற்கூடங்கள் நிறுவுவதில் ஏற்படும் அனைத்து இடர்பாடுகளையும் களைந்திட ஒற்றை சாளர முறையில் அனைத்து வகையான உரிமம், மின் இணைப்பு ஒப்புதல் ஆகியவற்றை எவ்வித சிரமம் இன்றி விரைந்து வழங்கிட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாவட்ட தொழில் மையம் மூலம் படித்த இளைஞர்கள் சுய தொழில் தொடங்க பல்வேறு திட்டங்களில் கடன்கள் வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பாக நீட்ஸ் திட்டத்தின்கீழ் படித்த இளைஞர்களுக்கு கடன் உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் தொழில் செய்ய ஆர்வமுள்ள தொழில் முனைவோர் பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், தூத்துக்குடி அலுவலகத்தை தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதில் மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் கண்ணன், முன்னோடி வங்கி மேலாளர் யோகானந்த் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story