ஏகாம்பரநாதர் கோவிலில் வெளிநாட்டு பயணிகள்


ஏகாம்பரநாதர் கோவிலில் வெளிநாட்டு பயணிகள்
x
தினத்தந்தி 12 Feb 2020 4:00 AM IST (Updated: 11 Feb 2020 10:59 PM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு தினந்தோறும், தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் நேற்று வெளிநாட்டினர் இந்த கோவிலுக்கு வருகை தந்தனர்.

காஞ்சீபுரம்,

கருவறையில் உள்ள ஏகாம்பரநாதரையும், ஏலவார்குழலி அம்மனையும் தரிசித்தனர். பிறகு அங்குள்ள கல்தூண் சிற்பங்களை பார்த்து வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வியந்தனர்.

கோவிலில் 3,500 ஆண்டுகளுக்கு முற்பட்ட மாமரம் இருக்கும் இடத்திற்கு சென்றனர். அப்போது அங்குள்ள அதிசய மாமரத்தை தொட்டு வணங்கினர். இந்த அதிசய மாமரத்தில் இனிப்பு, துவர்ப்பு, கசப்பு, புளிப்பு சுவையுடைய மாங்காய்கள் காய்க்க தொடங்கியுள்ளன. இந்த மாமரத்தை பற்றி வெளிநாட்டினர் அங்குள்ள கோவில் அர்ச்சகர்களிடம் கேட்டு தெரிந்து கொண்டனர்.

கோவிலுக்கு வந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கோவில் செயல் அலுவலர் தியாகராஜன், முன்னாள் மேலாளர் சீனிவாசன் ஆகியோர் வரவேற்றனர்.

Next Story