சிங்கப்பெருமாள் கோவில் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் என்ஜினீயர் பலி


சிங்கப்பெருமாள் கோவில் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் என்ஜினீயர் பலி
x
தினத்தந்தி 12 Feb 2020 3:45 AM IST (Updated: 11 Feb 2020 11:09 PM IST)
t-max-icont-min-icon

சிங்கப்பெருமாள் கோவில் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் என்ஜினீயர் பலியானார்.

வண்டலூர்,

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள காவத்துர் கிராமத்தை சேர்ந்தவர் தினேஷ் (வயது 26), இவர் ஒரகடம் அருகே உள்ள தனியார் நிறுவனத்தில் என்ஜினீயராக பணிபுரிந்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த 9-ந்தேதி மாலை ஒரகடத்தில் இருந்து செங்கல்பட்டு நோக்கி தனது மோட்டார் சைக்கிளில் செல்லும்போது சிங்கப்பெருமாள் கோவில் அருகே திடீரென நிலைதடுமாறி கீழே விழுந்தார்.

இதில் பலத்த காயம் அடைந்த தினேசை அக்கம் பக்கத்தினர் மீட்டு சென்னையில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று தினேஷ் பரிதாபமாக இறந்தார்.

இந்த விபத்து குறித்து மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story