மாவட்ட செய்திகள்

கோவை அருகே, தனியார் கல்லூரி பேராசிரியை வீட்டில் திருட முயன்ற கும்பல்- நகை-பணம் கிடைக்காததால் காருடன் தப்பி ஓட்டம் + "||" + Near Coimbatore, Private college professor at home The gang that tried to steal

கோவை அருகே, தனியார் கல்லூரி பேராசிரியை வீட்டில் திருட முயன்ற கும்பல்- நகை-பணம் கிடைக்காததால் காருடன் தப்பி ஓட்டம்

கோவை அருகே, தனியார் கல்லூரி பேராசிரியை வீட்டில் திருட முயன்ற கும்பல்- நகை-பணம் கிடைக்காததால் காருடன் தப்பி ஓட்டம்
கோவை அருகே தனியார் கல்லூரி பேராசிரியை வீட்டில் திருட முயன்றமர்ம கும்பல், நகை-பணம் கிடைக்காததால் காருடன் தப்பி சென்றது. இந்த சம்பவம்குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
இடிகரை,

கோவைநரசிம்மநாயக்கன்பாளையம்ஜோதிகாலனியை சேர்ந்தவர் ஹென்றி (வயது 65). இவர்ஊட்டி கலெக்டர்அலுவலகத்தில்சிவில்என்ஜினீயராக பணியாற்றிஓய்வு பெற்றவர். இவரது மனைவி புனிதா(56). இவர்களுடைய மகள்ஜென்னிக்குதிருமணமாகி 3 வயதில் ஒரு குழந்தை உள்ளது.ஜென்னியின்கணவர் வெளிநாட்டில்வேலை பார்த்துவருவதால் அவர் தனது குழந்தையுடன் பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார்.

ஜென்னியும், அவரது தாயார்புனிதாவும்நீலகிரி மாவட்டம் குன்னூரிலுள்ளதனியார் கல்லூரியில்பேராசிரியையாக பணியாற்றிவருகின்றனர்.இதற்காக குன்னூரில்கல்லூரி அருகில் வாடகைக்கு வீடுஎடுத்து தங்கிஉள்ளனர். வார இறுதிநாட்கள்மற்றும் விடுமுறையில்ஜோதி காலனியில்உள்ள வீட்டிற்கு வந்து செல்வர்.

இந்தநிலையில்நேற்று அதிகாலை 2மணியளவில் ஹென்றி வீட்டுக்குள்மர்மகும்பல்சுவர்ஏறி குதித்தது. இதையடுத்து வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்ற அவர்கள் பீரோவில் இருந்த துணிகளை கலைத்துநகை மற்றும் பணத்தை தேடினர். ஆனால் எதுவும் கிடைக்கவில்லை என்று தெரிகிறது. இதனால் விரக்தி அடைந்த அவர்கள் வீட்டில் இருந்த விலை உயர்ந்தடி.வி. மற்றும்கார் சாவியைஎடுத்துக்கொண்டு வெளியே நிறுத்தப்பட்டு இருந்தகாரை திருடிக் கொண்டு தப்பி செல்ல முயன்றனர்.

அப்போது சுற்றுச்சுவரில் இருந்தஇரும்பு கேட்டை அவர்களால் திறக்க முடியவில்லை. இதனால் காரை அதிக வேகத்தில் இயக்கி இரும்புகேட்மீது மோதினர். இதில் சுற்றுச்சுவருடன் கேட் உடைந்ததால் அந்த கும்பல்காருடன்தப்பி சென்றது.

இந்தநிலையில்நேற்று காலை 7மணியளவில், வீட்டின் சுவர்உடைக்கப்பட்டு கார்திருடப்பட்ட சம்பவம் குறித்து அருகில்இருந்தவர்கள்ஹென்றிமற்றும்போலீசாருக்குதகவல் தெரிவித்தனர். இதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தபோலீசார்அங்கு சோதனை செய்தனர். இதற்கிடையே ஹென்றி மற்றும் குடும்பத்தினரும் அங்கு வந்தனர்.

விசாரணையில் பணம் மற்றும் நகைகள் இல்லாததால் கார் மற்றும்டி.வி. மட்டும் திருட்டு போனதுதெரியவந்தது. இதுகுறித்துவழக்குப்பதிவுசெய்தபோலீசார்அந்த பகுதியில்உள்ள கண்காணிப்புகேமராபதிவுகளை கைப்பற்றிஆய்வு செய்து வருகின்றனர்.இந்த சம்பவம்அந்த பகுதியில்பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.