காரைக்குடி, சிவகங்கை பகுதியில் மாட்டு வண்டி பந்தயம்


காரைக்குடி, சிவகங்கை பகுதியில் மாட்டு வண்டி பந்தயம்
x
தினத்தந்தி 11 Feb 2020 10:00 PM GMT (Updated: 11 Feb 2020 8:23 PM GMT)

காரைக்குடி மற்றும் சிவகங்கை பகுதியில் மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.

காரைக்குடி,

காரைக்குடி அருகே திருவேலங்குடி கிராமத்தில் தைப்பூச திருவிழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் திருவேலங்குடி-நேமம் சாலையில் நடைபெற்றது. இதில் மொத்தம் 44 வண்டிகள் கலந்துகொண்டு பெரிய மாட்டு வண்டி பந்தயம், சின்ன மாட்டு வண்டி பந்தயம் என இரு பிரிவாக நடைபெற்றது. முதலில் நடைபெற்ற பெரிய மாட்டு வண்டி பந்தயத்தில் 13 வண்டிகள் கலந்துகொண்டு முதல் பரிசை கே.புதுப்பட்டி அம்பாள் மற்றும் கம்பம் அழகுபிள்ளை வண்டியும், 2-வது பரிசை ஆணையூர் செல்வம் வண்டியும், 3-வது பரிசை தானாவயல் வெங்கடாச்சலம் வண்டியும், 4-வது பரிசை கோ.வேலங்குடி சோலையன் வண்டியும் பெற்றன. 

பின்னர் நடைபெற்ற சின்ன மாட்டு வண்டி பந்தயத்தில் 31 வண்டிகள் கலந்துகொண்டு இரு பிரிவாக நடைபெற்றது. முதல் பிரிவில் முதல் பரிசை தினையாக்குடி சிவா வண்டியும், 2-வது பரிசை காரைக்குடி சிவா வண்டியும், 3-வது பரிசை ஒரத்தநாடு சீனி வண்டியும், 4-வது பரிசை விராமதி செல்வமணி வண்டியும் பெற்றது. பின்னர் நடைபெற்ற 2-வது பிரிவில் முதல் பரிசை கே.புதுப்பட்டி அம்பாள் மற்றும் பரளி செல்வி வண்டியும், 2-வது பரிசை கல்லாப்பேட்டை மந்தையம்மன் வண்டியும், 3-வது பரிசை பாண்டிகோவில் பாண்டியராசன் வண்டியும், 4-வது பரிசை கோட்டையூர் சுதன் வண்டியும் பெற்றது. வெற்றி பெற்ற வண்டிகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

இதேபோல் சிவகங்கை அருகே என்.நெடுங்குளத்தில் தி.மு.க. சார்பில் மாட்டு வண்டி பந்தயம் நெடுங்குளம்-இளையான்குடி சாலையில் நடைபெற்றது. இதில் மொத்தம் 65 வண்டிகள் கலந்து கொண்டு பெரிய மாட்டு வண்டி பந்தயம், சின்ன மாட்டு வண்டி பந்தயம் என இரு பிரிவு களாக நடைபெற்றது. முதலில் நடைபெற்ற பெரிய மாட்டு வண்டி பந்தயத்தில் 25 வண்டிகள் கலந்துகொண்டு முதல் பரிசை நகரம்பட்டி கண்ணன் வண்டியும், 2-வது பரிசை புதுப்பட்டி இளையராஜா வண்டியும், 3-வது பரிசை அவனியாபுரம் மோகன் வண்டியும், 4-வது பரிசை வாடிப்பட்டி செல்லாயி அம்மன் வண்டியும், 5-வது பரிசை கள்ளந்திரி பெரியசாமி வண்டியும் பெற்றது. பின்னர் நடைபெற்ற சின்ன மாட்டு வண்டி பந்தயத்தில் 40 வண்டிகள் கலந்துகொண்டு இரு பிரிவாக நடைபெற்றது. 

முதல் பிரிவில் முதல் பரிசை நெடோடை குணசேகரன் வண்டியும், 2-வது பரிசை முதுகுளத்தூர் ராஜேந்திரன் வண்டியும், 3-வது பரிசை கொட்டக்குடி பால்சாமி வண்டியும், 4-வது பரிசை தேவகோட்டை சரவணன் வண்டியும், 5-வது பரிசை தேனி மாவட்டம் சிறப்பாறை முத்தையா வண்டியும் பெற்றது. பின்னர் நடைபெற்ற 2-வது பிரிவில் முதல் பரிசை நெடுங்குளம் முத்துகிருஷ்ணன் வண்டியும், 2-வது பரிசை பாண்டிகோவில் பாண்டிசாமி வண்டியும், 3-வது பரிசை புதுப்பட்டி சற்குரு வண்டியும், 4-வது பரிசை மாத்தூர் பேச்சியம்மன் வண்டியும், 5-வது பரிசை நெற்புகப்பட்டி சதீஷ்குமார் வண்டியும் பெற்றது. வெற்றி பெற்ற வண்டிகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

Next Story