மாவட்ட செய்திகள்

6 நகர உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் அதிக வார்டுகளில் வெற்றி பா.ஜனதா 2-வது இடத்தை பிடித்தது + "||" + Congress wins more wards

6 நகர உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் அதிக வார்டுகளில் வெற்றி பா.ஜனதா 2-வது இடத்தை பிடித்தது

6 நகர உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடைபெற்ற தேர்தலில்  காங்கிரஸ் அதிக வார்டுகளில் வெற்றி  பா.ஜனதா 2-வது இடத்தை பிடித்தது
6 உள்ளாட்சி அமைப்பு களுக்கு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் அதிக வார்டுகளில் வெற்றி பெற்றது. பா.ஜனதா 2-வது இடத்தை பிடித்தது.
பெங்களூரு,

கர்நாடகத்தில் ெபங்களூரு புறநகர் மாவட்டத்தில் உள்ள ஒசக்கோட்டை, சிக்பள்ளாப்பூர், மைசூரு மாவட்டத்தில் உள்ள உன்சூர், பல்லாரி மாவட்டத்தில் உள்ள சிருகுப்பா ஆகிய 4 நகரசபைகள், விஜயாப்புரா மாவட்டத்தில் சிந்தகி புரசபை, தெக்கலகோடே டவுன் பஞ்சாயத்து ஆகிய 6 நகர உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த 9-ந் தேதி தேர்தல் நடைபெற்றது.

இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்பட்டது. இதில் ஒசக்கோட்டை நகரசபையில் மொத்தம் உள்ள 31 வார்டுகளில் பா.ஜனதா 22 வார்டுகளிலும், சுயேச்சைகள் 9 இடங்களிலும் வெற்றி பெற்றனர். காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. இதனால் ஒசக்கோட்டை நகரசபையை பா.ஜனதா கைப்பற்றியுள்ளது.

உன்சூர் நகரசபை

31 வார்டுகளை கொண்ட சிக்பள்ளாப்பூர் நகரசபையில் பா.ஜனதா 9 வார்டுகளிலும், காங்கிரஸ் 16 இடங்களிலும், ஜனதா தளம்(எஸ்) 2 இடத்திலும், சுயேச்சைகள் 4 இடங்களிலும் வெற்றி பெற்றன. சிக்பள்ளாப்பூரில் காங்கிரஸ் பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று சிக்பள்ளாப்பூர் நகரசபையை கைப்பற்றியுள்ளது.

உன்சூர் நகரசபையில் மொத்தம் உள்ள 31 வார்டுகளில் பா.ஜனதா 3 இடத்திலும், காங்கிரஸ் 14 இடங்களிலும், ஜனதா தளம்(எஸ்) 7 வார்டுகளிலும் சுயேச்சைகள் 7 வார்டுகளிலும் வெற்றி பெற்றனர். உன்சூரிலும் சுயேச்சைகளின் ஆதரவுடன் காங்கிரஸ் அதிகாரத்தை கைப்பற்றுகிறது.

சிந்தகி புரசபை

31 வார்டுகளை கொண்ட சிருகுப்பா நகரசபையில் பா.ஜனதா 11 வார்டுகளிலும், காங்கிரஸ் 19 இடங்களிலும், ஒரு வார்டில் சுயேச்சையும் வெற்றி பெற்றனர். இந்த சிருகுப்பா நகரசபையை காங்கிரஸ் தனி பெரும்பான்மையுடன் கைப்பற்றியுள்ளது.

சிந்தகி புரசபையில் மொத்தம் உள்ள 23 வார்டுகளில் பா.ஜனதா 3 வார்டு களிலும், காங்கிரஸ் 11 வார்டு களிலும், ஜனதா தளம்(எஸ்) 6 இடங்களிலும், சுயேச்சைகள் 3 இடத்திலும் வெற்றி பெற்றனர். இங்கும் சுயேச்சை ஆதரவுடன் சிந்தகி புரசபையை காங்கிரஸ் கைப்பற்ற உள்ளது. தெக்கலகோடே டவுன் பஞ்சாயத்தில் மொத்தம் உள்ள 20 வார்டுகளில் பா.ஜனதா 11 வார்டுகளிலும், காங்கிரஸ் 9 இடத்திலும் வெற்றி பெற்றன. தெக்கலகோடே புரசபையை பா.ஜனதா பெரும்பான்மை பலத்துடன் கைப்பற்றியுள்ளது.

காங்கிரஸ் முதல் இடம்

இந்த 6 நகர உள்ளாட்சி அமைப்புகளில் 167 வார்டு களுக்கு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் 69 வார்டு களிலும், பா.ஜனதா 59 இடங்களிலும், ஜனதா தளம்(எஸ்) 15 இடத்திலும், சுயேச்சைகள் 24 வார்டுகளிலும் வெற்றி பெற்றனர். காங்கிரஸ் கட்சி அதிக வார்டுகளில் வெற்றி பெற்று முதல் இடத்தை பிடித்துள்ளது. ஆளுங்கட்சியாக உள்ள பா.ஜனதா 2-வது இடத்தை பிடித்துள்ளது.

4 நகரசபைகளிலும் சிக்பள்ளாப்பூர், சிருகுப்பா ஆகிய நகரசபைகளை காங்கிரசும், ஒசக்கோட்டையை பா.ஜனதாவும் தனி பெரும்பான்மையுடன் கைப்பற்றியுள்ளது. உன்சூரில் தொங்கு நிலை ஏற்பட்டுள்ளது. அதே போல் சிந்தகி புரசபையை காங்கிரசும், தெக்கலகோடே டவுன் பஞ்சாயத்தை பா.ஜனதாவும் கைப்பற்றியுள்ளன.