மாணவர்களுக்கு தாய்மொழியில் கல்வி வழங்கினால் நாடு முன்னேற்றம் அடையும் கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி பேச்சு


மாணவர்களுக்கு தாய்மொழியில் கல்வி வழங்கினால் நாடு  முன்னேற்றம் அடையும்   கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி பேச்சு
x
தினத்தந்தி 12 Feb 2020 3:45 AM IST (Updated: 12 Feb 2020 2:19 AM IST)
t-max-icont-min-icon

மாணவர்களுக்கு தாய்மொழியில் கல்வி வழங்கினால் நாடு முன்னேற்றம் அடையும் என்று கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி கூறினார்.

மும்பை,

அவுரங்காபாத்தில் உள்ள டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் மராத்வாடா பல் கலைக்கழகத்தில் 60-வது பட்ட மளிப்பு விழா நடந்தது. இதில் கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி மாணவர்களுககு பட்டங்களை வழங்கி பேசினார்.

அப்போது அவர் கூறிய தாவது:-

மாணவர்களுக்கு அவர் களின் தாய்மொழியில் கல்வி வழங்கினால் நாடு முன்னேறும். சீனாவில் கடந்த 30 ஆண்டுகளாக ஆங்கிலம் கற்பிக்கப்படுகிறது. ஆனால் அதற்கு முன்னர் சீன மொழியில் பாடங்கள் கற்பிக்கப்பட்டன. அது அந்த நாட்டின் முன்னேற்றத்துக்கு உதவியது.

நிறைய வேலைவாய்ப்பு

நாட்டில் நிறைய வேலைவாய்ப்பு உள்ளது. மாணவர்கள் உயர்ந்த இலக்கை அடைய வேண்டும். அதற்காக முயற்சி செய்ய வேண்டும். 2025-ம் ஆண்டில் இந்தியா பொருளாதாரம் 5 டிரில்லியன் அமெரிக்க டாலராக இருக்கும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். அவர் மீது மக்கள் நம்பிக்கை வைத்து உள்ளனர். எனவே அது சாத்தியமாகும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story