அரக்கோணம் ரெயில் நிலையத்தில் 55 கிலோ கஞ்சா பறிமுதல்


அரக்கோணம் ரெயில் நிலையத்தில் 55 கிலோ கஞ்சா பறிமுதல்
x
தினத்தந்தி 11 Feb 2020 10:15 PM GMT (Updated: 11 Feb 2020 9:41 PM GMT)

அரக்கோணம் ரெயில் நிலையத்தில் ரெயிலில் 55 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

அரக்கோணம்,

அரக்கோணம் ரெயில் நிலையத்திற்கு நேற்று காலை கேரள மாநிலம் ஆலப்புழாவுக்கு செல்லும் தன்பாத் எக்ஸ்பிரஸ் ரெயில் வந்தது. அந்த ரெயிலில் குறிப்பிட்ட பெட்டியில் கஞ்சாவுடன் 2 பேர் வருவதாக ரெயில்வே பாதுகாப்பு படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து தயாராக இருந்த ரெயில்வே பாதுகாப்பு படையினர் உடனடியாக அந்த ரெயிலில் ஏறி சோதனை நடத்தினர். அப்போது 2 பேர் கஞ்சாவுடன் இருந்தனர். அவர்கள் 2 பேரையும் பிடித்து கீழே இறக்கினர்.

விசாரணையில் அவர்கள் மதுரையை சேர்ந்த தெய்வம் (வயது 33) மற்றும் தவமணி (55) என்பதும் கஞ்சா கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து அவர்களை 55 கிலோ கஞ்சாவுடன் வேலூர் மாவட்ட போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு ராமச்சந்திரனிடம் ஒப்படைத்தனர். இருவரையும் அவர் கைது செய்து 55 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story